என் மலர்
நீங்கள் தேடியது "madonneashwine"
- நடிகர் சிவகார்த்திகேயன் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், சிவகார்த்திகேயன் 'வீரமே ஜெயம்' என டப்பிங்கை தொடங்குகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Marching ahead? @Siva_Kartikeyan #MaaveeranFromJuly14th #Maaveeran #Mahaveerudu#VeerameJeyam ??@madonneashwin @AditiShankarofl @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @dineshmoffl @SunTV… pic.twitter.com/B58a26D7NC
— Shanthi Talkies (@ShanthiTalkies) May 29, 2023






