என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லைசென்ஸ்’.
    • இந்த படத்தில் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

    ஜே.ஆர்.ஜி. புரடக்சன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'லைசென்ஸ்'. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் T.சிவா, இயக்குனர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, 'சண்டியர்' ஜெகன், ரிவர்ஸ் உமன் ஆர்கனைசேஷன் மது சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "இந்த படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகனை பார்க்கும்போது திருமணம் ஆகி பத்து வருடம் இருக்கும் என நினைக்கிறேன். அப்படிப்பட்டவரை அவரது மாமனாரே மேடை ஏறி பாராட்டுகிறார் என்கிறபோது உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோன்று இவரது படமும் வெற்றி பெறும். பொழுதுபோக்கு படம் எடுப்பவர்கள் பொறுப்பாக படம் எடுப்பவர்கள் என இரண்டு பிரிவு உண்டு. அப்படி சமூகத்திற்காக படம் எடுப்பது தான் ஒரு பொறுப்பான இயக்குனரின் வேலை. அதைத்தான் இந்த படத்தின் இயக்குனர் செய்துள்ளார்.

    சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ராஜலட்சுமியை பாடகியாக சந்தித்தேன். இன்று ஒரு நடிகையாக சந்திக்கிறேன். அடுத்த தடவை அவரை சந்திக்கும்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் மிகப்பெரிய நடிகையாக சந்திக்க விரும்புகிறேன். இதற்கு முன் ஆசிரியராக பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் திரையில் பார்க்கும்போது நடிகைகளாக தான் தெரிந்தார்கள். இந்த படத்தில் ராஜலட்சுமி அந்த கதாபாத்திரமாகவே மாறி, நாம் பள்ளியில் படித்தபோது நமக்கு பாடம் நடத்திய ஆசிரியை போல எதார்த்தமாக தெரிகிறார். இந்த கதைக்கே அவர்தான் சரியான சாய்ஸ்.


    ஒரு டீச்சர் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று எதற்காக கேட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இன்றைக்கு சூழல் அப்படித்தான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் ஒழுங்கீனமாக, சுயமரியாதை இல்லாமல், அராஜகமாக நடந்து கொள்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை ஆசிரியர்களின் கையில் பிரம்பு இருந்தது. மாணவர்களும் ஒழுக்கமாக இருந்தனர். அந்த பிரம்பை பிடுங்கி கீழே போட்டது யார் ? அந்த பிரம்பு கீழே விழுந்ததும் மாணவர்களிடம் இருந்து ஒழுக்கமும் போய்விட்டது.

    அதனால் ஆசிரியர்கள் கையில் மீண்டும் பிரம்பை கொடுக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் வராத ஒழுக்கம் கடைசி வரை வராது. மாணவர்கள் பிரச்சனையில் எப்போதுமே ஆசிரியர் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். இப்போது ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கண்டிக்கும் ஆசிரியர்களை பற்றி பெற்றோர்களிடம் புகார் கூறி அவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் மாணவர்களுக்கு டிசியை கொடுத்து அனுப்ப வேண்டும்.


    ஆசிரியர்களிடம் இருந்து பிரம்பை எப்படி பிடுங்கிப் போட்டார்களோ, அதேபோல மக்களிடம் பக்தியையும் பிடுங்கி போட முயற்சிக்கிறார்கள். பக்தி இருக்கும் வரை தான் தார்மீக பயம் இருக்கும். இது சமூக சிந்தனை கொண்ட நல்ல படம். மாணவர்கள் அனைவரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்த படத்திற்கு தமிழக அரசு வரிச்சலுகை கொடுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையுடன் பேசினார்.

    • சமீபத்தில் சரத்குமார் நடித்திருந்த பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரம் கவனம் பெற்றது.
    • சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேசியுள்ளார்.

    தமிழில் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சூரியன், நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சரத்குமார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். நடிகராக மட்டுமல்லாது சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.


    சரத்குமார்

    சரத்குமார்

    இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், தற்போது எனக்கு 69 வயதாகிறது; இன்னும் 150 வயது வரை உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன். அதனை 2026ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

    • நடிகர் ஆர்யா நடித்துள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' பட டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.
    • இந்த டிரைலர் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

    சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்யா மற்றும் சித்தி இத்னானி இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
    • ஆதரவற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் ஆண்டனி விருந்தளித்தார்.

    விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



    சில தினங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி, திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஆண்டி பிகிலி கிட்டை வழங்கி, அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா, சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிச்சைக்காரர்களை அழைத்து படம் பார்க்க வைத்ததுடன், அவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



    இந்நிலையில் ஆதரவற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அசைவ உணவுகள் தன் கைகளினாலே பரிமாறி விஜய் ஆண்டனி விருந்தளித்துள்ளார். அவரின் இந்த செயல் பலரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

    • கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
    • இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி சுரேஷ்

    இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ், புன்னகையை பகிர்ந்து கொள்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

    • அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    • இவ்விழாவில் தனது 234வது படம் குறித்து கமல் பேசியுள்ளார்.

    இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது (IIFA 2023) வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.




    இந்த பிரமாண்ட விழாவில், தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை பாராட்டும் விதமாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி, நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. நடிகர் கமலுக்கு இந்த விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார்.




    இந்நிகழ்வில் நடிகர் கமல், மணிரத்னம் இயக்கும் தனது 234வது படம் குறித்து பேசியுள்ளார். தனது 234வது படத்தின் மீது ரசிகர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பு சற்று பதற்றமடைய வைப்பதாகவும், படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், எங்களது கூட்டணியின் முதல் படமான நாயகன் படத்தில் பணியாற்றியதை போன்று கூலாக உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

    • 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
    • இப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.


    எல்.ஜி.எம்

    எல்.ஜி.எம்

    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது.


    எல்.ஜி.எம்

    எல்.ஜி.எம்

    இந்நிலையில் 'எல்.ஜி.எம்' படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வேனுக்குள் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் குடும்பத்துடன் இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

    கூடல் நகர் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதன்பின்னர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல விருதுகளையும் இப்படம் குவித்தது.


    சீனு ராமசாமி

    சீனு ராமசாமி

    இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் ஒன்றை இணைத்து அவர் பதிட்டிருப்பது,

    மேடைக்

    கச்சேரிகளுக்கு பெரிய ரசிகனாகிய நான்

    இவரை வியந்தேன்

    நெகிழ்ச்சியாகவும்

    இருந்தது,

    இந்த பாடலை நீங்கள் கேட்டு

    ருப்பீர்கள்

    இச்சோகப்பாட்டை ஒருவர் இன்முகத்தோடு

    பாடி நம் இதயத்தை கனக்கச்

    செய்கிறார் அவர்

    அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்..

    துன்பம்

    சுவையாக மாறுகிறது

    அதை இனிப்போடு நாம்

    எதிர்கொண்டால் என்பதை இவர்

    பாடிய விதத்தை

    காணுங்கால்

    அறியலாம்.

    குரு வணக்கம்

    தேச வணக்கம்

    சொல்லி முடிகிறது

    கணீர் கச்சேரி

    என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

    • பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ’சந்திரமுகி 2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

    சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.


    சந்திரமுகி 2 படக்குழு

    சந்திரமுகி 2 படக்குழு

    லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். நேற்று 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு 'ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி..' என்ற தனது காமெடியை நடிகை ராதிகாவுடன் இணைந்து ரீ கிரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.


    சந்திரமுகி 2 படக்குழு

    சந்திரமுகி 2 படக்குழு

    இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக புகைப்படங்கள் வெளியிட்டு நடிகை ராதிகா அறிவித்துள்ளார். மேலும், எனக்கு தங்க மோதிரம் மற்றும் விலையுயர்ந்த கடிகாரம் பரிசளித்த முதல் ஹீரோ ராகவா லாரன்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    • அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பின்னர் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும் ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

    தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினிமாவில் அறிமுகமாகி இதுவரை 49 படங்களில் நடித்து முடித்துள்ள அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


    ஈகை

    ஈகை

    'ஈகை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கிரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தை அசோக் வேலாயுதம் இயக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • டோமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள படம் "ரெஜினா".
    • இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

    மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்த்துள்ளார்.


    ரெஜினா

    ரெஜினா

    தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் ரெஜினா படத்தின் டீசர் மே 30ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    • கமலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது (IIFA 2023) வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

    இந்த பிரமாண்ட விழாவில், தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை பாராட்டும் விதமாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி, நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    நடிகர் கமலுக்கு இந்த விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். கமல் விருதை பெற்றவுடன் அரங்கத்தில் இருந்த நடிகர் சல்மான் கான் உட்பட அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி ஆரவாரப்படுத்தினர்.

    ×