என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'வீரன்' திரைப்படம் வருகிற ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    வீரன்

    வீரன்

    சமீபத்தில் 'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான வீரன் திருவிழா பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

    வீரன் திரைப்படம் வருகிற ஜுன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உலகம் முழுவதும் இன்று (மே 28-ஆம் தேதி ) 'உலக பட்டினி தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
    • ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்' அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நீண்ட நாள் பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.


    விஜய் மக்கள் இயக்கம்

    விஜய் மக்கள் இயக்கம்

    நடிகர் விஜய்யின் உத்தரவுபடி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலம் இன்று (மே 28) தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் அறிவித்தபடி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட இந்த மதிய உணவை மக்கள் பலரும் வாங்கி பயன் பெற்றனர்.

    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
    • இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் இயக்குனர் சீனு ராமசாமி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்பட்டது.


    சீனு ராமசாமி

    சீனு ராமசாமி

    இந்நிலையில், புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இன்று இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர் பெரிய விசயம் என்று பதிவிட்டுள்ளார்.

    • தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் கே.வாசு மரணம்.
    • இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல தெலுங்கு இயக்குனர் கே.வாசு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். 72 வயதாகும் கே.வாசு தெலுங்கு முன்னணி கதாநாயகன் சிரஞ்சீவியை முதன் முதலில் பிராணம் கரீது என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். சிரஞ்சீவி முதலில் நடித்தது புனிதக் ரால்லு என்ற படமாக இருந்தாலும் அதற்கு முன்பாகவே கே.வாசு இயக்கிய பிராணம் கரீது படம் திரைக்கு வந்து விட்டது.

    மேலும் கே.வாசு இயக்கிய ஸ்ரீ சீரடி சாய்பாபா படம் இந்தியா முழுவதிலும் உள்ள சாய்பாபா பக்தர்களின் மனதை கவர்ந்தது. கோத்தல ராயுடு, இண்டிலோ ஸ்ரீமதி வீதிலோ குமாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவரது தந்தை பிரத்தியேகாத்மா, சகோதரர் ஹேமாம்பதராவ் ஆகியோரும் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் கே.வாசு மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • கில்லி, தமிழன், ஆறு, பகவதி, ஏழுமலை, என்னை அறிந்தால் படங்களில் வில்லனாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி, இரு தினங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார்.
    • தற்போது விமர்சித்தவர்களுக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழில் கில்லி, தமிழன், ஆறு, பகவதி, ஏழுமலை, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமடைந்த ஆஷிஷ் வித்யார்த்தி, தனது மனைவி ராஜோஷியை விவாகரத்து செய்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரூபாலி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதை வலைத்தளத்தில் பலரும் விமர்சித்தனர்.

    இதற்கு ஆஷிஷ் வித்யார்த்தி காட்டமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "60 வயதாகும் உனக்கு திருமணம் தேவையா? முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுத்து விட்டாயா? என்று பலர் என்னை விமர்சிக்கின்றனர். இந்த வயதில் இன்னொரு துணை எதற்கு என்றும் கேலி செய்கின்றனர். எல்லோரது வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காது. வேறு வேறு நம்பிக்கையோடு வாழ்கிறோம்.



    ஆனால் எல்லோரும் பொதுவாக எதிர்பார்ப்பது வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதுதான். 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட எனது முதல் மனைவிக்கும் எனக்கும் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் வேறுவேறாக இருந்தன. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் பிரிந்து விட்டோம். எனக்கு ஒரு துணை வேண்டும் என்று தோன்றியது.



    55 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். அப்போதும் சர்ச்சை ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரூபாலியை சந்தித்து காதலித்தோம். கணவன் மனைவியாக வாழ முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம். எனக்கு இப்போது 57 வயதுதான். இன்னும் 60 வயது ஆகிவிடவில்லை. காதலில் வயதுக்கு வேலை இல்லை. இருவரும் சந்தோஷமாக இணைந்து பயணிப்போம்'' என்றார்.

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

    டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    அயலான்

    அயலான்

    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் தயாராகி கொண்டிருப்பதாகவும் விரைவில் டீசரை வெளியிடவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    ஜப்பான் 

    கார்த்தி பிறந்த நாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஜப்பான் பட டீசரை படக்குழு வெளியிட்டது. இதனை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 'ஜப்பான்' மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    ஜப்பான் போஸ்டர்

    இந்நிலையில், ஜப்பான் டீசர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த டீசர் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


    • இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ரகு தாத்தா'.
    • இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தசரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ரகு தாத்தா படக்குழு

    இந்நிலையில், 'ரகு தாத்தா' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், அந்த பதிவில், " ரகுதாத்தா படப்பிடிப்பு நிறைவுற்றது. உங்கள் இதயத்தை அதிர வைக்கும் புரட்சிக்காக காத்திருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளனர்.


    • ஆறு இயக்குனர்கள் இயக்கத்தில் உருவான ஆந்தாலஜி 'மார்டன் லவ் சென்னை'.
    • இதில் அனிருத் கனகராஜனின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூமுருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்ஷய் சுந்தர் ஆகிய இயக்குனர்கள் நியூயார்க் டைம்ஸில் வெளியான 'மாடர்ன் லவ்' கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய ஆந்தாலஜி 'மார்டன் லவ் சென்னை'. ஆறு பகுதிகளை கொண்ட இந்த கதையின் முதல் மூன்று பாகங்களுக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். மேலும், ஜி.வி. பிரகாஷ்குமார், ஷான் ரோல்டன், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் தலா ஒரு பாகத்திற்கு இசையமைத்துள்ளார்கள்.


    மாடர்ன் லவ் சென்னை

    இதில், மூன்றாவது கதையாக இடம்பெற்றிருப்பது கிருஷ்ணகுமார் ராம்குமாரின் 'காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி'. இதில் ரிது வர்மாவின் பள்ளி காதலனாக வரும் அனிருத் கனகராஜனின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் தற்போது நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடித்து வரும் 'ஜோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இவர் தமிழில் மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ்

    இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.


    திருப்பதியில் கீர்த்தி சுரேஷ்

    பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தைத் தொடர்ந்து தமிழில் இரண்டு படங்கள் நடித்து வருவதாகவும் அது விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து கோவிலை விட்டு வெளியேறிய கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் கீர்த்தி சுரேஷ் வெளியேற முடியாமல் திணறினார். உடனே தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் கீர்த்தி சுரேஷை மீட்டு பேட்டரி கார் மூலம் அவர் கார் இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

    • பி. வாசு இயக்கத்தில் ’சந்திரமுகி 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.


    சந்திரமுகி 2

    லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ராதிகா பகிர்ந்த வீடியோ

    இந்நிலையில், 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு 'ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி..' என்ற தனது காமெடியை நடிகை ராதிகாவுடன் இணைந்து ரீ கிரியேட் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை நடிகை ராதிகா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமானவர் இர்பான்.
    • இர்பான் கார் மோதியதில் பத்மாவதி என்ற பெண் பலியானார்.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    செங்கல்பட்டு மாவட்டம் புத்தேரி அருகே உள்ள கோனாதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (55). இவர் புத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி இரவு அவரது மகளை பார்ப்பதற்காக மறைமலை நகர் பகுதிக்கு சென்றுவிட்டு கோனாதியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பும் போது மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று பத்மாவதி மீது மோதி விபத்துக்குள்ளானது.


    பத்மாவதி -இர்பான்

    இந்த விபத்தில் சுமார் 20 அடிக்கு மேலாக தூக்கி வீசப்பட்ட பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பது தெரியவந்தது.

    தொடந்து இந்த காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை கைது செய்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த காரில் யூ டியூபர் இர்பான் பயணம் செய்து வந்ததாக கூறப்பட்டதையடுத்து தற்போது இந்த சம்பவத்தின் போது இர்பான் இந்த காரில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக 304 (ஏ) என்ற பிரிவின் கீழ் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இர்பானின் மைத்துனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ×