மூன்றாவது பாடலை வெளியிடும் ஹிப்ஹாப் ஆதி

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'வீரன்' திரைப்படம் வருகிற ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹிப்ஹாப் ஆதி
ஹிப்ஹாப் ஆதி
Published on

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

வீரன்
வீரன்

வீரன்

சமீபத்தில் 'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான வீரன் திருவிழா பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

வீரன் திரைப்படம் வருகிற ஜுன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com