உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது

உலகம் முழுவதும் இன்று (மே 28-ஆம் தேதி ) 'உலக பட்டினி தினம்’ அனுசரிக்கப்படுகிறது.ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
விஜய்
விஜய்
Published on

உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்' அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நீண்ட நாள் பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

நடிகர் விஜய்யின் உத்தரவுபடி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலம் இன்று (மே 28) தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அறிவித்தபடி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட இந்த மதிய உணவை மக்கள் பலரும் வாங்கி பயன் பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com