என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "k.vasu"

    • தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் கே.வாசு மரணம்.
    • இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல தெலுங்கு இயக்குனர் கே.வாசு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். 72 வயதாகும் கே.வாசு தெலுங்கு முன்னணி கதாநாயகன் சிரஞ்சீவியை முதன் முதலில் பிராணம் கரீது என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். சிரஞ்சீவி முதலில் நடித்தது புனிதக் ரால்லு என்ற படமாக இருந்தாலும் அதற்கு முன்பாகவே கே.வாசு இயக்கிய பிராணம் கரீது படம் திரைக்கு வந்து விட்டது.

    மேலும் கே.வாசு இயக்கிய ஸ்ரீ சீரடி சாய்பாபா படம் இந்தியா முழுவதிலும் உள்ள சாய்பாபா பக்தர்களின் மனதை கவர்ந்தது. கோத்தல ராயுடு, இண்டிலோ ஸ்ரீமதி வீதிலோ குமாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவரது தந்தை பிரத்தியேகாத்மா, சகோதரர் ஹேமாம்பதராவ் ஆகியோரும் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் கே.வாசு மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×