search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narmatha"

    • தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு'.
    • இந்த நிகழ்ச்சியில் திருவாரூரை சேர்ந்த நர்மதா என்பவர் போட்டியாளராக இருக்கிறார்.

    தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் திருவாரூரை சேர்ந்த நர்மதா என்பவர் 'இட ஒதுக்கீடு எனது உரிமை' என்ற தலைப்பில் இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இவரின் உரையை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான-பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் "தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது.


    நர்மதா

    நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன்.

    எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய நர்மதாவின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடை வெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்! அனைவரும் சொல்வோம்-இடஒதுக்கீடு நமது உரிமை!" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


    அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமாகி பிரபலமான நடிகை நந்திதா, தற்போது பள்ளியில் கர்ப்பமாகும் மாணவியாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். #Nandita
    அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என தொடர்ந்து நடித்து வருகிறவர் நந்திதா ஸ்வேதா.

    சமீபத்தில் அவர் நடித்த அசுரகுலம் படம் வெளிவந்தது. தற்போது நந்திதா நர்மதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பள்ளி மாணவி கர்ப்பமாகி அந்தக் குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க போராடுகிற கதை. நந்திதா இதில் பள்ளி மாணவி, கர்ப்பிணி, ஒரு குழந்தைக்கு தாய் என 3 விதமான தோற்றத்தில் நடிக்கிறார்.



    அவருடன் விஜய் வசந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாலாவின் உதவியாளர் கீதா ராஜ்புத் இயக்குகிறார். இதுவரை பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்து வந்த நந்திதாவுக்கு இந்தப் படம் இன்னொரு பரிமாணத்தை கொடுக்கும் என்கிறார்கள்.
    கீதா ராஜ்புத் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாக இருக்கும் ‘நர்மதா’ படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் இருந்து தொடங்கி இருக்கிறது. #Narmatha
    ஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. சதீஸ் பி.சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார். கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குனராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.

    படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாகச் சொல்கிறேன். இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது’ என்றார்.



    இயக்குனர் கீதா ராஜ்புத், திருநங்கையை பற்றி ‘என்னைத் தேடிய நான்’, காதலைப் பேசும் ‘மயக்கம்’, காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘கபாலி’ என மூன்று குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கும் இவர், இதற்காக சிறந்த இயக்குனர் என்ற விருதையும் வென்றிருக்கிறார் என்பதும், பாலாவின் இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நந்திதா, அடுத்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் அம்மாவாக நடிக்க இருக்கிறார். #NanditaSweta
    தமிழ் சினிமாவில் உள்ள நாயகிகள் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது பல நாயகிகள் தங்களது கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். 

    அந்த வரிசையில் நந்திதா ஸ்வேதாவும் இணைந்திருக்கிறார். ‘நர்மதா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், நந்திதா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். இதுபற்றி படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டருமான கீதா ராஜ்புத் கூறியதாவது:-

    “தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியாக சொல்லும் படம், இது. இதில், கதையின் நாயகி நந்திதா ஸ்வேதா 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதை நாயகனாக விஜய் வசந்த் நடிக்கிறார். கவுரவ வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.



    படத்துக்காக, நாகர்கோவிலில் இயற்கை எழிலுடன் கூடிய திறந்தவெளி அரங்கம், பிரமாண்டமான முறையில் அமைக்கப்படுகிறது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.

    டைரக்டர்-தயாரிப்பாளர் கீதா ராஜ்புத், திருநங்கை பற்றிய ‘என்னை தேடிய நான்,’ ‘காதலை பேசும், ‘மயக்கம்,’ காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘கபாலி’ ஆகிய 3 குறும் படங்களை தயாரித்து இயக்கியவர். பாலா டைரக்‌ஷனில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #NanditaSweta
    ×