திருமணமாகவுள்ள நிலையில் விபத்து.. விளக்கமளித்த சர்வானந்த்

தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்த்.ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது நடிகர் சர்வானந்தின் கார் விபத்துக்குள்ளானது.
சர்வானந்த்
சர்வானந்த்
Published on

தமிழில் எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்துக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து வருகிற ஜூன் 3-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

சர்வானந்த் -ரக்ஷிதா ரெட்டி

இந்த நிலையில் நேற்று (மே 28) காலை ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது நடிகர் சர்வானந்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில தினங்களில் திருமணம் ஆகவுள்ள நிலையில் சர்வானந்த் விபத்திற்குள்ளானது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்வானந்த் -ரக்ஷிதா ரெட்டி

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சர்வானந்த் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று காலை என்னுடைய கார் விபத்துக்குள்ளான செய்திகள் வெளியாகின. இது ஒரு சிறிய விபத்துதான். உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் நான் வீட்டில் நலமுடன் இருக்கிறேன். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. என் மீது வைத்துள்ள உங்கள் அக்கறைக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com