என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளவர் துணை நடிகர் பிரபு.
    • இவரது உடலுக்கு இசையமைப்பாளர் இமான் இறுதி சடங்குகளை செய்தார்.

    தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் துணை நடிகர் பிரபு. இவர் தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆதரவற்ற நிலையில் இருந்த பிரபுவுக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்துவந்தார்.


    பிரபு உடலுக்கு இறுதி சடங்குகளை செய்த இமான்
    பிரபு உடலுக்கு இறுதி சடங்குகளை செய்த இமான்

    இந்நிலையில் துணை நடிகர் பிரபு நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் பிரபுவின் உடலுக்கு மருத்துவ உதவிகள் செய்த வந்த இசையமைப்பாளர் டி.இமான் இறுதி சடங்குகளை செய்தார்.


    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்து கவனம் பெற்றவர் வினோதினி வைத்தியநாதன்.
    • இவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பிய நபருக்கு பதிலளித்துள்ளார்.

    இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்ததன் மூலம் பிரலபமடைந்தவர் வினோதினி வைத்தியநாதன். அதன்பின்னர் 'கடல்', ஜிகிர்தண்டா', 'ஓ.கே. கண்மணி', 'அப்பா', 'சூரரைப் போற்று', 'கோமாளி', உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்து கவனம் பெற்றார்.


    கமல் - வினோதினி வைத்தியநாதன்

    கமல் - வினோதினி வைத்தியநாதன்

    வினோதினி வைத்தியநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும், வீடியோக்களையும் தொடர்சியாக பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.


    வினோதினி வைத்தியநாதன்

    வினோதினி வைத்தியநாதன்


    இந்நிலையில் வினோதினி வைத்தியநாதன் சமூக வலைத்தளத்தில் கட்சியின் கொள்கை குறித்து பதிவிட்ட நபருக்கு கூலாக பதிலளித்துள்ளார். அதாவது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த வினோதினியிடம் நீங்களாவது கட்சியோட கொள்கை என்ன னு தெரிஞ்சுக்குவீங்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த வினோதினி, ஓ தாராளமா. முதல் கொள்கை - மதக்குறியீடுள்ள ஃபோட்டோவை DPயாக வைக்காமலிருத்தல் என்று பதிலளித்தார்.

    • இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தண்டட்டி'.
    • 'தண்டட்டி' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டட்டி'. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.


    இப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'தண்டட்டி'படத்தின் இரண்டாவது பாடலான 'காக்கி பையன்' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    'தண்டட்டி' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    கங்குவா படக்குழு

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. அங்கு படத்தில் இடம்பெறும் பீரியட் போர்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


    கங்குவா

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு வருகிற 19-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் இதில் சூர்யா, திஷா பதானியின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை படப்பிடிப்பு முடிந்தது மீண்டும் கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் விஜய் தற்போது ’லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


    ஹரிஷ் உத்தமன் பதிவு

    இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் 'லியோ' திரைப்படத்தையும் 'விக்ரம்' திரைப்படத்தையும் இணைக்கும் வகையில் மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஹரிஷ் உத்தமன் 'நல்லா இருக்கும் இல்லையா' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கமல்ஹாசன் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. . இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.


    கமல்ஹாசன்- எச்.வினோத்

    இதனிடையே 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்கவுள்ளதாகவும் இப்படத்தின் கதையில் சில திருத்தங்கள் இருப்பதால் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


    கமல்ஹாசன் -விஜய் சேதுபதி

    இந்நிலையில், இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜாக்சன் துரை 2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜாக்சன் துரை'. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். மேலும், சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜாக்சன் துரை 2' திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக பிரிட்டிஷ் கால செட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிபிராஜ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


    • அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    • இதையடுத்து, ஜானி டெப் உடனான அனைத்து வழக்குகளையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்கி முடித்துக் கொள்ளவுள்ளதாக ஆம்பர் ஹெர்ட் அறிவித்திருந்தார்.

    'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்பட தொடர் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின் போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்குத்தொடர்ந்தார். இதை எதிர்த்து தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.


    ஆம்பர் ஹெர்ட் - ஜானி டெப்

    இந்த வழக்குகளில் ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு உலக அளவில் பேசுபொருளானது.


    ஆம்பர் ஹெர்ட் - ஜானி டெப்

    இதையடுத்து, ஜானி டெப் உடனான அனைத்து வழக்குகளையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்கி முடித்துக் கொள்ளவுள்ளதாக ஆம்பர் ஹெர்ட் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆம்பர் ஹெர்ட் வழங்கவுள்ள ஒரு மில்லியன் டாலரை நடிகர் ஜானி டெப், 'மேக் ஏ பிலிம் பவுண்டேஷன்', 'தி பெயிண்டட் டர்ட்டில்','ரெட் பெதர்', 'டெடியரோ சோசைட்டி' மற்றும் 'அமசோனியா பண்ட் அலயன்ஸ்' போன்ற ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா தற்போது 'குஷி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    'விடி 13'  படக்குழு

    இதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் 13-வது படத்தை 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய பரசுராம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் இணைந்துள்ளார். 'விடி 13' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஜய்யின் 'வாரிசு' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


    'விடி 13'  படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடி 13' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். 


    • நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
    • இவரது வழக்கை பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பிரபல இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவின.


    சுஷாந்த் சிங் ராஜ்புட் -ரியா சக்ரவர்த்தி

    இதையடுத்து மும்பை போலீசார் நடத்திவந்த இந்த விசாரணை மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவையும் நடிகரின் மரண வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன.

    சமீபத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.


    ரியா சக்ரவர்த்தி  பதிவு

    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில், அவரது முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தி சமூக வலைதளத்தில் சுஷாந்த் சிங்குடன் இருக்கும் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து அவரை நினைவுக்கூர்ந்துள்ளார். ஒரு பாறையின் மேல் இவர்கள் இருவரும் இருக்கும் இந்த வீடியோவில் 'நீ இங்கு இருந்திருந்தால்' என்று பதிவிட்டுள்ளார்.

    சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவரது 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.


    விஷ்ணு விஷால்- எஸ்.ஜே.சூர்யா- அபர்ணா பாலமுரளி

    இந்நிலையில், தனுஷ் படத்தில் நடிப்பதாக பரவி வந்த செய்திக்கு நடிகர் விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நான் அந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதாக பரவி வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. நான் அந்த படத்தில் ஒரு பகுதியாக நடிக்க விரும்பினாலும் என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக என்னால் நடிக்க இயலாது. எனது சார்பில் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவிற்கு ரசிகர்கள் தனுஷின் 50-வது படத்தில் நடிப்பது குறித்து பேசுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.


    இதையடுத்து, 'மாவீரன்' படத்தின் இரண்டாவது பாடலான 'வண்ணாரப்பேட்டையில' பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    ×