என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெஜினா'.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ரெஜினா'. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    ரெஜினா போஸ்டர்

    தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரெஜினா' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் நடித்துள்ளனர்.

    'கண்ணை நம்பாதே' தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    மாமன்னன்

    மாமன்னன்

    'மாமன்னன்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள "கொடி பறக்குற காலம்" பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சிகப்பு நிற புடவையில் கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘வள்ளி மயில்’.
    • இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வருகிறார்.

    வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுசீந்திரன். இவர் தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் 'வள்ளி மயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    வள்ளி மயில்

    இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.


    வைரலாகும் வள்ளி மயில் படப்பிடிப்பு புகைப்படம்

    இந்நிலையில் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வள்ளி மயில்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், படப்பிடிப்பு தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், இவானா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கள்வன்'.
    • இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    கள்வன்

    கள்வன்

    ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர், பாடல் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் ஜிவி பிராகாஷின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 2018-ம் ஆண்டு ஒரு இசை ஆல்பம் மூலம் அறிமுகமானார் பிரபல நடிகை பார்க் சூரியுன்.
    • இவர் தற்போது பிரபல டி.வி. தொடரான ஸ்னோ டிராப்பில் நடித்து வந்தார்.

    தென் கொரியாவை சேர்ந்த பிரபல நடிகை பார்க் சூரியுன் (வயது29). இவர் 2018-ம் ஆண்டு ஒரு இசை ஆல்பம் மூலம் அறிமுகமானார். அதன்பின் டி.வி. தொடர், இசை ஆல்பங்களில் நடித்தார். தற்போது பிரபல டி.வி. தொடரான ஸ்னோ டிராப்பில் நடித்து வந்தார்.

    இந்த நிலையில் பார்க் சூரியுன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு விமானத்தில் தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது விமானத்தில் இருந்து கீழே இறங்கிய போது படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு பலன் அளிக்கவில்லை. பார்க் சூ ரியுன், மூளைச் சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதுகுறித்து பார்க் சூரியுனின் தாய் சூம்பி கூறும் போது, "எனது மகளின் மூளை மட்டும் சுயநினைவின்றி இருக்கிறது. அவரது இதயம் இன்னும் துடிக்கிறது. ஒரு தாய், தந்தையாக அவளது இதயம் யாரோ ஒருவரிடம் சென்று துடிக்கிறது என்ற எண்ணத்தில் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும்" என்றார்.

    • மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் இரண்டாவது பாடலான 'வண்ணாரப்பேட்டையில' பாடல் நாளை வெளியாகவுள்ளது.

    சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    மாவீரன்

    மாவீரன்

    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.


    மாவீரன்

    மாவீரன்

    'மாவீரன்' படத்தின் இரண்டாவது பாடலான 'வண்ணாரப்பேட்டையில' பாடல் நாளை (14-ஆம் தேதி) வெளியாகவுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் 'மாவீரன்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு 'வண்ணாரப்பேட்டையில' பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து இணைந்த்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார்.
    • தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    துல்கர் சல்மான்

    துல்கர் சல்மான்

    இப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஜிவி பிரகாஷ் குமார்

    ஜிவி பிரகாஷ் குமார்

    இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இணைந்துள்ளதாக படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிவித்துள்ளது. துல்கர் சல்மானுடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சூர்யா

    சூர்யா

    இந்நிலையில் சூர்யாவின் 44வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா 44 படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா இயக்கவுள்ளதாகவும், இப்படத்தின் மூலம் சூர்யா இந்தியில் அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் மகாபாரத சரித்திர கதையாக உருவாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்திற்கு கர்ணா என்று பெயரிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'தமிழரசன்',
    • இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'தமிழரசன்'. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ராமயா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாலிவுட் நடிகர் சோனு சூட், யோகி பாபு, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். எஸ்என்எஸ் புரொடெக்ஷன் நிறுவனம் சார்பில் எஸ்.கௌசல்யா ராணி இப்படத்தை தயாரித்துள்ளார்.


    தமிழரசன்

    தமிழரசன்

    இந்நிலையில் ஆக்ஷன் த்ரில்லராக வெளியான தமிழரசன் படத்தின் ஓடிடி ரிலிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ஜூன் 16ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


    தமிழரசன்

    தமிழரசன்


    இதுகுறித்து விஜய் ஆண்டனி பேசியதாவது, "இயக்குனரின் கருத்துரு அளித்த நம்பிக்கை என்னை இப்படத்தில் இணைத்தது. அச்சத்தை ஏற்படுத்தும் சமூகத்தைக் கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் காட்சிகளை தமிழரசன் இதில் இணைத்துள்ளார், மேலும் இந்தப் படம் வலுவான செய்தியை வழங்குவதில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். திரையரங்குகளில் வெளியானாலும், இந்தப் படத்தைப் பற்றி அறியாதோர் அல்லது காணாதோர் இன்னும் பலர் இருக்கிறார்கள். தமிழரசன் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான கதை என்பதால் ஜூன் 16 ஆம் தேதி ஜீ5 இல் பார்க்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்" என்றார்.

    • மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் 'எஸ்எஸ்எம்பி29'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த வெளியாகியுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதைத்தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.


    ராஜமவுலி - மகேஷ் பாபு

    ராஜமவுலி - மகேஷ் பாபு

    மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. இந்த படம் ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    மகேஷ் பாபு

    மகேஷ் பாபு

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    தனுஷ் - அபர்ணா பாலமுரளி

    தனுஷ் - அபர்ணா பாலமுரளி


    இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தில் இணையவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் 8 தோட்டாக்கள், சூரரைப் போற்று படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    • கேரளாவை பூர்வீகமாக கொண்ட கசான் கான், தமிழ் சினிமாவில் செந்தமிழ்பாட்டு என்ற படத்தின்மூலம் நடிகராக அறிமுகமானார்.
    • கசான் கான் மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ், மலையாளம், கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் கசான் கான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

    இவரது மரணத்தை மலையான திரைத்துறையின் தயாரிப்பாளர் என்.எம்.பாதுஷா உறுதிப்படுத்தி உள்ளார்.

    கேரளாவை பூர்வீகமாக கொண்ட கசான் கான், தமிழ் சினிமாவில் செந்தமிழ்பாட்டு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

    இவர் தமிழில் செந்தமிழ்பாட்டு, கலைஞர், சேதுபதி ஐ.பி.எஸ், பிரியமானவளே உள்ளிட்ட சுமார் 50 படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர்.

    இதேபோல், கன்னடம், மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×