பிறந்தநாளில் படப்பிடிப்பை தொடங்கும் மகேஷ் பாபு

மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் 'எஸ்எஸ்எம்பி29'.இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த வெளியாகியுள்ளது.
மகேஷ் பாபு
மகேஷ் பாபு
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதைத்தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.

ராஜமவுலி - மகேஷ் பாபு
ராஜமவுலி - மகேஷ் பாபு

ராஜமவுலி - மகேஷ் பாபு

மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. இந்த படம் ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ் பாபு
மகேஷ் பாபு

மகேஷ் பாபு

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com