சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ஜிவி பிரகாஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு

இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், இவானா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கள்வன்'.இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ்
Published on

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கள்வன்
கள்வன்

கள்வன்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர், பாடல் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் ஜிவி பிராகாஷின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com