அடுத்த பட வேலையில் தீவிரம் காட்டும் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘வள்ளி மயில்’.இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வருகிறார்.
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி
Published on

வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுசீந்திரன். இவர் தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் 'வள்ளி மயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

வள்ளி மயில்

இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

வைரலாகும் வள்ளி மயில் படப்பிடிப்பு புகைப்படம்

இந்நிலையில் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வள்ளி மயில்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், படப்பிடிப்பு தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com