search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொடி பறக்குற காலம் மாமன்னன் பட பாடலை வெளியிடும் படக்குழு
    X

    மாமன்னன்

    "கொடி பறக்குற காலம்" மாமன்னன் பட பாடலை வெளியிடும் படக்குழு

    • உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் நடித்துள்ளனர்.

    'கண்ணை நம்பாதே' தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    மாமன்னன்

    'மாமன்னன்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள "கொடி பறக்குற காலம்" பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சிகப்பு நிற புடவையில் கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    Next Story
    ×