என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • லைகா குழுமத்தின் நிறுவனரும், தலைவரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமாக இருப்பவர் அல்லிராஜா சுபாஸ்கரன்.
    • சுபாஸ்கரன் 26 தமிழ் அரசியல் கைதிகளுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார்.

    26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் உதவித்தொகை வழங்கியுள்ளார் லைகா குழும தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமாகிய சுபாஸ்கரன் .


    லைகா குழுமத்தின் நிறுவனரும், தலைவரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா ரூ. 25 லட்சத்தை விடுதலை செய்யப்பட்ட 26 தமிழ் அரசியல் கைதிகளுக்கு சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் லைகா குழும உப தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


    இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்புகளை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அல்லிராஜா சுபாஸ்கரன் வழிவகை செய்துள்ளார். பல்லாண்டுகாலமாக சிறையில் வாடிய கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தலா ரூ. 25 லட்சத்தை தனது தாயார் திருமதி ஞானாம்பிகையின் பெயரில் இயங்கி வரும் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் மொத்தம் ஆறரை கோடி ரூபாய்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் இரண்டாவது பாடலான 'வண்ணாரப்பேட்டையில' பாடல் வரும் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர். இதனை படக்குழு மூன்று நிமிட காமெடியான வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான 'விருமன்' திரைப்படத்தில் அதிதி ஷங்கர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • ஜோதி முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்டதைப் படிக்காதே'.
    • இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஜோதி முருகன் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் 'கண்டதைப் படிக்காதே'. புல்லி மூவிஸ் சார்பில் எஸ். சத்யநாராயணன் தயாரித்துள்ள இப்படத்தில் ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ், ஆரியன், ராஜ் நவீன், சபிதா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் சத்யநாராயணன் மணிமாறன் என்கிற எழுத்தாளர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.


    செல்வா ஜானகிராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மஹிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ,படப்பை போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. பதினொரு நாடுகளில் பல்வேறு விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் ஒன்பது சர்வதேச விருதுகள் வென்றுள்ளது . 'கண்டதைப் படிக்காதே' திரைப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படம் குறித்து தயாரிப்பாளர் சத்யநாராயணன், "சென்னையில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறாள். அதன் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சிவராமன் புலனாய்வில் இறங்குகிறார். மர்மத்தின் வேர் தேடி கொடைக்கானல் செல்கிறார். அங்கே போன பிறகு தான் தற்கொலைகளுக்கான திகிலான சம்பவம் அவருக்குத் தெரிகிறது.


    மணிமாறன் ஓர் எழுத்தாளர். ஒரு திகில் கதையை எழுதி இருக்கிறார். அந்தக் கதையைப் படித்த அவரது பேத்தி நிஷா அதை இணையதளத்தில் பதிவிடுகிறாள். அந்தக் கதையைப் படித்ததால் நிஷாவும் இறந்து போகிறாள். இணையதளத்தில் வந்த அந்தக் கதையைப் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இந்தப் பட்டியலில் புலனாய்வு செய்யப் போன காவல்துறை அதிகாரியின் தங்கையும் அடக்கம் . அதனால் இதன் பின்னணியில் உள்ள மர்மத்தைத் தேடி விசாரணை செய்கிறார். அவர் அதற்காக கொடைக்கானல் செல்கிறார். அங்கே நிஷா இல்லை. அவர் நிஷாவின் பாட்டியைத் தான் சந்திக்கிறார்.


    கண்டதை படிக்காதே போஸ்டர்

    இதில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயலும் போது இதன் பின்னணியில் ஒரு சாமியார் இருப்பது தெரிகிறது. அவரது கட்டுப்பாட்டில் உள்ள இறந்து போன ஒரு தம்பதிகளின் ஆவிகள் செய்யும் வேலை தான் அது. இணையத்தில் வெளிவந்தது அவர்களது சொந்தக் கதையாகும். அவர்களின் கதையைப் படிப்பவர்களை அந்த ஆவிகள் கொன்றுவிடுகின்றன என்று தெரிகிறது. அந்த சாமியார் சிவராமனைக் கொல்ல முயல்கிறார். சிவராமன் அதை எப்படி எதிர்கொள்கிறார்? அந்த ஆத்மாக்களைத் தடுத்து எப்படி மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த கண்டதை படிக்காதே திரைப்படத்தின் கதை" என்று கூறினார்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தி ல்விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


    விஜய் - அனிருத்

    விஜய் - அனிருத்


    இந்நிலையில், 'லியோ' படத்தில் இசையமைப்பாளர் அனிருத் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் அனிருத் தோன்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைநகரம்-2'
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'தலைநகரம்-2'. இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். 'தலைநகரம்-2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    தலைநகரம் 2

    தலைநகரம் 2

    இந்நிலையில் 'தலைநகரம்-2' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் பரத் பேசியதாவது, "என்னுடைய திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களைத் தந்த இயக்குனர்கள் எல்லாருக்கும் நன்றிகள். அதில் முக்கியமானவர் துரை சார். நேபாளி படத்தில் என்னை அவ்வளவு சிறப்பாக வடிவமைத்தார். அவர் அதிக நாட்கள் உழைத்த படம் நேபாளி.


    பரத்

    பரத்

    அவர் வேலையில் டெரராக இருப்பார். அவரின் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் இருக்கும். அதனால் தான் 20 வருடத்திற்கும் மேலாக இயக்குனராக வலம் வருகிறார். சுந்தர் சி சாரின் படத்தில் நடிக்க ஆசை, இந்த மேடையைப் பயன்படுத்தி இங்கே உங்களிடம் வாய்ப்பு கேட்டுக்கொள்கிறேன். சுந்தர் சி சார் அட்டகாசமாக இந்தக் கதையில் பொருந்திப்போகிறார். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள் நன்றி" என்றார்.

    • ‘மாஸ்டர்’, ‘வீட்டுல விசேஷம்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை சங்கீதா.
    • இவர் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    சென்னை, கே.கே.நகர் பிடிராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை சங்கீதா. இவர் நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்', ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான 'வீட்டுல விசேஷம்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகை சங்கீதாவின் வீட்டு வாசலில் இருந்து காலணிகள் மாயமாகிவுள்ளது. இதையடுத்து நடிகை சங்கீதா குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில், இரண்டு இளைஞர்கள் அவரது காலணிகளை திருடிக் கொண்டு லிப்டில் சென்றது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்சியடைந்த சங்கீதா இந்த செயலுக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பாதுகாப்புக்காக தான் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். சாதாரணமாக இரண்டு பேர் உள்ளே நுழைந்து காலணிகளை திருடிச் சென்றது வேதனை அளிக்கிறது. எந்த நோக்கத்திற்காக அந்த இளைஞர்கள் இங்கு வந்தார்கள், எதுவும் கிடைக்காததால் காலணிகளை திருடிச் சென்றார்களா? என்று தெரியவில்லை என கூறினார். மேலும், ஒரு எச்சரிக்கைக்காக இந்த வீடியோவை வெளியிடுவதாகவும் இது குறித்து போலீசில் புகாரளிக்கவுள்ளதாகவும் நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • பல படங்களில் கமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் ரோபோ சங்கர்.
    • நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.


    சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். படத்திற்காக ரோபோ சங்கர் உடல் இடையை குறைத்தாரா? அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் தனது உடல் எடை குறைந்தது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகர் ரோபோ சங்கர். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருந்தபோது எனக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக எனது உடல் எடை வெகுவாக குறைந்துவிட்டது. சரியான நேரத்தில் நான் நல்ல மருத்துவர்களிடம் சென்றதால் அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர்.


    கடந்த நான்கு மாதங்களாக நிறைய காமெடி நிகழ்ச்சிகளை பார்த்தேன். எத்தனையோ மக்களை நான் சிரிக்க வைத்திருக்கிறேன். ஆனால் என் கஷ்டத்தை தீர்த்தது காமெடி நிகழ்ச்சிகள் தான். அதிலும் விஜய் டிவி ராமருடைய காமெடியை அசைக்கவே முடியாது. எனது உடல் நிலை குறித்து யூ டியூபில் வந்த வதந்திகளை பார்க்கும் பொழுது எனக்கு சிரிப்பு தான் வந்தது" என்று கூறினார்.

    • விஜய் சேதுபதி, தற்போது 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 'புரொடக்ஷன் 5' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.


    விஜேஎஸ்51 

    விஜேஎஸ்51 

    இப்படத்தில் ருக்மினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியின் 51வது படமான இப்படத்தை செவன் சி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள கோவிலில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.


    விஜேஎஸ்51 படக்குழு

    விஜேஎஸ்51 படக்குழு

    இந்நிலையில் மலேசியாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் ஹலிதா ஷமீம் 2015-ஆம் ஆண்டு 'மின்மினி' படத்தை இயக்கினார்.
    • 7 வருட இடைவெளிக்கு பிறகு கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை படமாக்கி வருகிறார்.

    பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய "புத்தம் புது காலை விடியாதா" என்ற ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான "லோனர்ஸ்" அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனிடையே இவர் இயக்கத்தில் தயாரான 'மின்மினி' திரைப்படம் 2015-ல் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது. இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015-ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார்.


    ஹலிதா ஷமீம்- கதீஜா ரகுமான்

    இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு 'மின்மினி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இதனை ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    கதீஜா ரகுமான் ஷங்கர் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை பாடியிருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'சின்னஞ்சிறு நிலவே' பாடலையும் கதீஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘லூசிபர்’.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாகவுள்ளது.

    நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 'லூசிபர்'. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார். இதில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.


    லூசிபர்

    லூசிபர்

    இப்படத்தின் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்ற பெயரில் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், லடாக், நொய்டா, துருக்கி, ஈராக், ஆஃப்கானிஸ்தான், துபாய் மற்றும் ரஸ்யாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயமானதாக அவரது மனைவி சில தினங்களுக்கு முன்பு போலீசில் புகாரளித்தார்.
    • இந்த விவகாரத்தில் வீட்டில் வேலை செய்யும் அனைவரிடமும் போலீசார் விசாரனை நடத்தியதில் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது.

    பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு சென்னை அபிராமிபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக அவரது மனைவி தர்ஷணா பாலா அபிராமிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் மார்ச் 30-ஆம் தேதி புகாரளித்தார்.

    அந்த புகாரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்த தங்க நகைகளை பார்த்ததாகவும் அதன்பின்னர் பிப்ரவரி மாதம் வீட்டில் நகைகளை பார்த்தபோது காணவில்லை எனவும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.


    விஜய் யேசுதாஸ்

    விஜய் யேசுதாஸ்

    இது தொடர்பாக அபிராமிபுரம் போலீசார் வீட்டில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் பணியாட்கள் ஒன்பது பேரிடம் இதுவரை விசாரணையும் நடைபெற்றது.

    இந்நிலையில், விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில், வீட்டில் வேலை செய்யும் அனைவரிடமும் போலீசார் விசாரனை நடத்தியதில் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது. விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருப்பதால் பலமுறை அவரை போலீசார் தொடர்பு கொண்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் புகார் அளித்த விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனாவும் விசாரணைக்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.


    விஜய் யேசுதாஸ்

    விஜய் யேசுதாஸ்

    நகைகள் வைக்கப்பட்டிருந்த நம்பர் பதிவிடக்குடிய லாக்கர் உடைக்கப்படவில்லை, லாக்கரின் கடவுச்சொல் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரின் மனைவிக்கு மட்டுமே தெரியும் எனவும் 40 நாட்கள் கழித்து புகார் அளித்தது குறித்து போலீசார் சந்தேகிக்கின்றனர். விளக்கம் கேட்டபோது விஜய் யேசுதாஸின் குடும்பத்தினர் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் சந்தேகத்தின் பேரில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் பொய் புகார் அளிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் என போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

    • மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'.
    • இப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    மாவீரன்

    மாவீரன்

    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.


    மாவீரன்

    மாவீரன்

    இந்நிலையில், 'மாவீரன்' இரண்டாவது சிங்கிள் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ×