என் மலர்
சினிமா செய்திகள்
- கடந்த ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் ‘போர் தொழில்’.
- இப்படம் குறித்து நடிகர் அருண் விஜய் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

போர் தொழில்
இந்நிலையில் 'போர் தொழில்' படத்தை பாராட்டி நடிகர் அருண் விஜய் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'போர் தொழில்' காட்சிகள் அதிகமாகியுள்ளது. எல்லாம் இடங்களிலும் ஹவுஸ்ஃபுல், வார விடுமுறை படத்திற்கு கூடுதல் பலம். பிரம்மாண்ட விளம்பரங்களை காட்டிலும் படத்தின் கதை தான் மிகவும் முக்கியமானது என்று தெளிவாக காட்டுகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.
- இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பொம்மை
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'பொம்மை' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுந்தர். சி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தலைநகரம் -2'.
- இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தலைநகரம் 2
அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கி வருகிறார்.

தலைநகரம் 2
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தலைநகரம்-2' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. மேலும் இப்படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தலைநகரம் 2 படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனிமல்'.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அனிமல்
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் 'அனிமல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அனிமல்
இந்நிலையில் 'அனிமல்' படத்தின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் நிறைந்த இந்த டிரைலரில் விரைவில் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘போர் தொழில்’.
- இப்படத்திற்கு திரைப்பிரலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன், தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

போர் தொழில்
அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'போர் தொழில்' திரைப்படம் கடந்த ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஷ்ணு விஷால்
'போர் தொழில்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இப்படம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ராட்சசனை மிஞ்சிவிட்டதா? படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

அசோக் செல்வன் - போர் தொழில்
இதற்கு பதிலளித்த அசோக் செல்வன், மச்சி.. அதற்கு பதில் சொல்லும் சிறந்த நபர் நீ தான்! நீயே பாத்துட்டு சொல்லு.. நன்றி டா, நீ எனக்காக மகிழ்ச்சியாக இருப்பாய் என்று எனக்கு தெரியும். வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Haha machi.. the best person to answer that is you! So neeyae paathutu sollu..
— Ashok Selvan (@AshokSelvan) June 11, 2023
And thanks da, I know you'll be happy for me ?❤️
Cheers and love! https://t.co/zKawxYWID4
- கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.
- தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்து வருகிறார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி
இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழில் பல்வேறு படங்களில் நடிக்கவுள்ளேன் என்று தெரிவித்தார்.
- சித்தார்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'டக்கர்'.
- இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

டக்கர்
'டக்கர்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கடைசி எபிசோட்டான ஓய்வு பெற்ற ரவுடி ஒரகடம் மாதவன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார்.
- இந்த விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.

விஜய்
தற்போது விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார். அப்பொழுது 10,12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்
இந்நிலையில் விருது பெறும் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் பெற்றோர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அடையாள அட்டை மாவட்ட தலைவர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'.
- இப்படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

மாவீரன்
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

மாவீரன் - சிவகார்த்திகேயன்
இந்நிலையில்,'மாவீரன்' படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஆடியோ லான்ச் வருகிற ஜூலை 2ம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
- சுந்தர். சி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தலைநகரம் -2’.
- இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தலைநகரம் 2
அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தலைநகரம்-2' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. மேலும் இப்படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது.

தலைநகரம் 2
இந்நிலையில் தலைநகரம் 2 படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
- விதார்த் தற்போது கதாநாயகனாக நடிக்கும் படம் லாந்தர்.
- இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
நடிகர் விதார்த் தற்போது 'லாந்தர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாஜி சலீம் இயக்குகிறார். இவரின் முதல் படமான 'விடியும் வரை காத்திரு' இறுதிக்கட்டப் பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தொழிலதிபர் பத்ரி, எம் சினிமா சார்பில் தயாரிக்கிறார்.

லாந்தர்
இந்நிலையில் லாந்தர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என் எதிர்பாக்கப்படுகிறது.
- பிரபுதேவா 2020-ம் ஆண்டு ஹிமானி சிங்கை, இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்.
- இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

பிரபுதேவா - ஹிமானி சிங்
அதன்பின்னர் 2019-ல் முதுகுவலி காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் பிரபுதேவா சிகிச்சை பெற்றார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் காதல் மலர்ந்தது. 2020-ம் ஆண்டு ஹிமானி சிங்கை, பிரபுதேவா இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் பிரபுதேவா-ஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுந்தரம் மாஸ்டரின் குடும்பத்தில் பிறந்துள்ள முதல் பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.






