'ரைட் இஸ் பேக்'.. வைரலாகும் தலைநகரம் 2 படத்தின் டிரைலர்

சுந்தர். சி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தலைநகரம் -2'.இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
'ரைட் இஸ் பேக்'.. வைரலாகும் தலைநகரம் 2 படத்தின் டிரைலர்
Published on

'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தலைநகரம் 2
தலைநகரம் 2

தலைநகரம் 2

அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கி வருகிறார்.

தலைநகரம் 2
தலைநகரம் 2

தலைநகரம் 2

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தலைநகரம்-2' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. மேலும் இப்படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தலைநகரம் 2 படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com