டிரைலரை வெளியிடும் தலைநகரம் 2 படக்குழு

சுந்தர். சி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தலைநகரம் -2’.இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தலைநகரம் 2
தலைநகரம் 2
Published on

'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தலைநகரம் 2
தலைநகரம் 2

தலைநகரம் 2

அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தலைநகரம்-2' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. மேலும் இப்படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது.

தலைநகரம் 2  
தலைநகரம் 2  

தலைநகரம் 2  

இந்நிலையில் தலைநகரம் 2 படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com