search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரம்மாண்ட ஆடியோ லான்சுக்கு தயாராகும் மாவீரன் படக்குழு
    X

    பிரம்மாண்ட ஆடியோ லான்சுக்கு தயாராகும் மாவீரன் படக்குழு

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'.
    • இப்படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    மாவீரன்

    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.


    மாவீரன் - சிவகார்த்திகேயன்

    இந்நிலையில்,'மாவீரன்' படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஆடியோ லான்ச் வருகிற ஜூலை 2ம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×