பூஜையுடன் தொடங்கிய விதார்த் படப்பிடிப்பு

விதார்த் தற்போது கதாநாயகனாக நடிக்கும் படம் லாந்தர்.இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
விதார்த்
விதார்த்
Published on

நடிகர் விதார்த் தற்போது 'லாந்தர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாஜி சலீம் இயக்குகிறார். இவரின் முதல் படமான 'விடியும் வரை காத்திரு' இறுதிக்கட்டப் பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தொழிலதிபர் பத்ரி, எம் சினிமா சார்பில் தயாரிக்கிறார்.

லாந்தர்
லாந்தர்

லாந்தர்

இந்நிலையில் லாந்தர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என் எதிர்பாக்கப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com