தனுஷ் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்

நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவரது 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தனுஷ் -விஷ்ணு விஷால்
தனுஷ் -விஷ்ணு விஷால்
Published on

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.

விஷ்ணு விஷால்- எஸ்.ஜே.சூர்யா- அபர்ணா பாலமுரளி

இந்நிலையில், தனுஷ் படத்தில் நடிப்பதாக பரவி வந்த செய்திக்கு நடிகர் விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நான் அந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதாக பரவி வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. நான் அந்த படத்தில் ஒரு பகுதியாக நடிக்க விரும்பினாலும் என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக என்னால் நடிக்க இயலாது. எனது சார்பில் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு ரசிகர்கள் தனுஷின் 50-வது படத்தில் நடிப்பது குறித்து பேசுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com