என் மலர்

  நீங்கள் தேடியது "Johnny Depp"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்கில் ஜானி டெப் நிரபராதி என கோர்ட் தீர்ப்பளித்தது.
  • இந்த வழக்கு திரைப்படமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

  'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்பட தொடர் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின் போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்குத்தொடர்ந்தார். இதை எதிர்த்து தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.


  ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட்

  இந்த வழக்குகளில் ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு உலக அளவில் பேசுபொருளானது.


  ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட்

  இந்நிலையில், இந்த வழக்கை திரைப்படமாக எடுக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு ஹாட் டேக்: தி டெப் அல்லது ஹெர்ட் டிரைல் என பெயரிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஜானிடெப்.
  • இவர் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார்.

  'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகராக உயர்ந்தவர் ஜானிடெப். இவர், நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து 2015-ல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

  ஜானிடெப்

  ஜானிடெப்

   

  இல்லற வாழ்க்கையில் தன்னை கொடுமைப்படுத்தியதாக ஜானிடெப் மீது ஆம்பர் ஹேர்ட் குற்றம் சாட்டினார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்ததால் ஆம்பர் ஹேர்ட் மீது ஜானிடெப் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

   

  ஜானிடெப்

  ஜானிடெப்

  இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ஜானிடெப் படம் இயக்க வருகிறார். இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு 'தி பிரேவ்' என்ற படத்தை இயக்கியிருந்தார். 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படம் இயக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.

  ஜானிடெப்

  ஜானிடெப்

   

  1884-ல் இருந்து 1920-ம் ஆண்டு வரை வாழ்ந்த இத்தாலியின் பிரபல ஓவியரும் சிற்பியுமான அமெடியோ மோடிக்லியானியின் வாழ்க்கை கதையை அவர் இயக்கவிருக்கிறார். உலகளாவிய மனிதரான மோடிக்லியானியின் வாழ்க்கை கதையை படமாக்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜானிடெப் கூறியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜானிடெப் படம் இயக்குவது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்கில் ஜானி டெப் நிரபராதி என கோர்ட் தீர்ப்பளித்தது.
  • மேலும், ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

  'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்பட தொடர் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின் போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்குத்தொடர்ந்தார். இதை எதிர்த்து தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.

  இந்த வழக்குகளில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு உலக அளவில் பேசுபொருளானது.

  ஆம்பர் ஹெர்ட் - ஜானி டெப்

  மேலும், ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குக்கு பிறகு ஜானி டெப் நடிக்க இருந்த 'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' ஆறாவது பாகத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், டிஸ்னி நிறுவனம் ஜானி டெப்பிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல் அடுத்த பாகத்தில் நடிக்க  2,535 கோடி ரூபாய் ( 301 மில்லியன்) ஒப்பந்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  ஜானி டெப் இதற்கு முன்பு "இனி 300 மில்லியன் டாலர்கள் கொடுத்தால் கூட 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தில் நடிக்க மாட்டேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்குத்தொடர்ந்தார்.
  • தனியார் தொலைக்காட்சியில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் ஆம்பர் ஹெர்ட் பங்கேற்றார்.

  வாஷிங்டன் :

  'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்பட தொடர் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின் போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்குத்தொடர்ந்தார். இதை எதிர்த்து தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.

  இந்த வழக்குகளில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு உலக அளவில் பேசுபொருளானது.

  இந்நிலையில், இந்த வழக்கு தீர்ப்புக்கு பின் முதல் முறையாக தனியார் தொலைக்காட்சியில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் ஆம்பர் ஹெர்ட் பங்கேற்றார். அப்போது, இத்தனை நிகழ்வுகள் நடந்த பின்னரும் ஜானி டெப்பை இன்னும் காதலிக்கிறீர்களா? என நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆம்பரிடம் கேள்வி எழுப்பினர்.

  அதற்கு பதிலளித்த ஆம்பர், ஆம் நிச்சயமாக. நான் ஜானி டெப்பை காதலிக்கிறேன். நான் அவரை (ஜானி டெப்) என் முழு மனதோடு காதலிக்கிறேன். உடைந்த உறவை மீண்டும் சரிசெய்ய நான் என்னால் முடிந்தவற்றை முயற்சித்தேன். ஆனால், அதை என்னால் சரிசெய்யமுடியவில்லை' என்றார்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஜானி டெப்பின் முன்னாள் மனைவி, அவருக்கு ரூ.116 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்கம் பகுதியில் இயங்கும் பிரபல இந்திய உணவகத்தில் ஜானி டெப் விருந்து வைத்தார்.

  லண்டன்:

  'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' திரைப்படத்தில் ஜேக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் மூலம் இந்திய மக்களிடம் பிரபலமடைந்தவர் ஜானி டெப். இவர் தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

  அந்த தீர்ப்பில் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி, அவருக்கு ரூ.116 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் ரூ.48.1 லட்சத்திற்கு ஜானி டெப் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

  இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்கம் பகுதியில் இயங்கும் பிரபல இந்திய உணவகத்திற்கு சென்ற அவர், ரூ.48.1 லட்சத்திற்கு வகைவகையான இந்திய உணவுகளை வாங்கி நண்பர்களுக்கு வழங்கியுள்ளார்.

  இந்த விருந்தில் 21 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த விருந்து குறித்து உணவக உரிமையாளர் கூறுகையில், ஜானி டெப்பின் அணுகுமுறை மிகவும் எளிமையாக இருந்தது. கர்வம் இல்லாமல் அவர் எங்கள் ஊழியர்களுடன் பழகினார் என கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டேவிட் ஏட்ஸ் இயக்கத்தில் எட்டி ரெட்மயின், ஜானி டெப், ஜூட் லா, கேத்தரின் வாட்டர்சன், சியோ கிராவிட்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்: கிரின்டல்வால்டின் குற்றங்கள்' படத்தின் விமர்சனம். #FantasticBeastsTheCrimesofGrindelwaldReview
  ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் முதல் பாகத்தின் இறுதியில் அமெரிக்காவின் மந்திர சக்திகளின் குழுவால் வில்லனான ஜானி டெப் (கிரின்டல்வால்ட்) நியூயார்க்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்டுகிறார். அதன் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐரோப்பாவில் செய்த குற்றங்களுக்காக ஜானி டெப்பை லண்டன் சிறைக்கு மாற்றுகின்றனர்.

  அப்போது தனது மந்திர சக்தியை பயன்படுத்தி தப்பிக்கும் ஜானி டெப், கடைசி பாகத்தில் இறந்துவிட்டதாக நினைக்கப்பட்ட எஸ்ரா மில்லரை (கிரெடென்ஸ்) தேடுகிறார். இதற்கிடையே வெளிநாடுகளுக்கு செல்வதற்கான தனது தடையை நீக்கக் கோரி நாயகன் எட்டி ரெட்மயின் (ஸ்கேமண்டர்) நியூயார்க்கில் உள்ள மந்திர சக்திகளின் குழுவிடம் கோருகிறார்.  அப்போது ஜானி டெப் தப்பித்ததும், அவர் எஸ்ரா மில்லரை தேடி அவனை பயன்படுத்திக்க நினைப்பதும் எட்டிக்கு தெரிய வருகிறது. கடைசியில், ஜானி டெப் எஸ்ராவை கண்டுபிடித்தாரா? தனது குடும்பத்தை தேடி செல்லும் எஸ்ராவின் நிலை என்ன ஆனது? எட்டி காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

  ஜானி டெப் அமைதியான வில்லனாக மிரட்டியிருக்கிறார். எட்டி ரெட்மயின், ஜூட் லா, கேத்தரின் வாட்டர்சன், சியோ கிராவிட்ஸ், எஸ்ரா மில்லர் என அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கடைசி பாகத்தில் நடித்த பலரும் இந்த பாகத்திலும் தொடர்கின்றனர். டேன் போஜ்லர் வழக்கமான தனது காமெடியால் ரசிக்க வைத்திருக்கிறார்.  முழுக்க முழுக்க மந்திரி சக்திகளை மையப்படுத்தி ஸ்வாரஸ்யமான குழப்பத்துடனான திரைக்கதையில் படத்தை உருவாக்கி இருக்கிறார் டேவிட் ஏட்ஸ். கிராபிக்ஸில் வரும் மிருகங்கள், மாய சக்திகள் என வண்ணமயமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

  ஜேம்ஸ் நியூட்டன் ஹோவார்டின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிலிப் ரோஸ்லாட்டின் ஒளிப்பதிவு சிறப்பு.

  மொத்தத்தில் `ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்: கிரின்டல்வால்டின் குற்றங்கள்' ரசிக்கலாம். #FantasticBeastsTheCrimesofGrindelwaldReview #EddieRedmayne #JohnnyDepp

  ×