என் மலர்

  சினிமா செய்திகள்

  மீண்டும் ஜாக் ஸ்பேரோவாக ஜானி டெப்? மன்னிப்பு கேட்ட டிஸ்னி?
  X

  ஜானி டெப்

  மீண்டும் ஜாக் ஸ்பேரோவாக ஜானி டெப்? மன்னிப்பு கேட்ட டிஸ்னி?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்கில் ஜானி டெப் நிரபராதி என கோர்ட் தீர்ப்பளித்தது.
  • மேலும், ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

  'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்பட தொடர் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின் போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்குத்தொடர்ந்தார். இதை எதிர்த்து தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.

  இந்த வழக்குகளில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு உலக அளவில் பேசுபொருளானது.

  ஆம்பர் ஹெர்ட் - ஜானி டெப்

  மேலும், ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குக்கு பிறகு ஜானி டெப் நடிக்க இருந்த 'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' ஆறாவது பாகத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், டிஸ்னி நிறுவனம் ஜானி டெப்பிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல் அடுத்த பாகத்தில் நடிக்க 2,535 கோடி ரூபாய் ( 301 மில்லியன்) ஒப்பந்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  ஜானி டெப் இதற்கு முன்பு "இனி 300 மில்லியன் டாலர்கள் கொடுத்தால் கூட 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தில் நடிக்க மாட்டேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×