என் மலர்

  சினிமா செய்திகள்

  முன்னாள் மனைவிக்கு எதிரான வழக்கில் வெற்றி: ரூ.48 லட்சத்திற்கு விருந்து வைத்த நடிகர்
  X

  ஜானி டெப்

  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

  முன்னாள் மனைவிக்கு எதிரான வழக்கில் வெற்றி: ரூ.48 லட்சத்திற்கு விருந்து வைத்த நடிகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜானி டெப்பின் முன்னாள் மனைவி, அவருக்கு ரூ.116 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்கம் பகுதியில் இயங்கும் பிரபல இந்திய உணவகத்தில் ஜானி டெப் விருந்து வைத்தார்.

  லண்டன்:

  'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' திரைப்படத்தில் ஜேக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் மூலம் இந்திய மக்களிடம் பிரபலமடைந்தவர் ஜானி டெப். இவர் தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

  அந்த தீர்ப்பில் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி, அவருக்கு ரூ.116 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் ரூ.48.1 லட்சத்திற்கு ஜானி டெப் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

  இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்கம் பகுதியில் இயங்கும் பிரபல இந்திய உணவகத்திற்கு சென்ற அவர், ரூ.48.1 லட்சத்திற்கு வகைவகையான இந்திய உணவுகளை வாங்கி நண்பர்களுக்கு வழங்கியுள்ளார்.

  இந்த விருந்தில் 21 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த விருந்து குறித்து உணவக உரிமையாளர் கூறுகையில், ஜானி டெப்பின் அணுகுமுறை மிகவும் எளிமையாக இருந்தது. கர்வம் இல்லாமல் அவர் எங்கள் ஊழியர்களுடன் பழகினார் என கூறியுள்ளார்.

  Next Story
  ×