என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “பாபா பிளாக்‌ ஷீப்”.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் "பாபா பிளாக் ஷீப்". நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றிகிறார் விருமாண்டி படத்தின் மிகவும் பிரபலமடைந்த நடிகை அபிராமி. இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு திரைக்கதையாக, "பாபா பிளாக் ஷீப்" உருவாகி வருகிறது.


    பாபா பிளாக் ஷீப் படக்குழு

    பாபா பிளாக் ஷீப் படக்குழு

    இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் "பாபா பிளாக் ஷீப்" படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் புதுமுகங்களை, முன்னணி திரைப்பிரபலங்கள், மேடையில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.


    பாபா பிளாக் ஷீப் படக்குழு

    பாபா பிளாக் ஷீப் படக்குழு

    இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், ஓபேலி கிருஷ்ணா, நடிகர்கள் இளவரசு, மணிகண்டன், பஞ்சு சுப்பு, தர்ஷன், ரியோ, நடிகை வாணி போஜன், ஈரோடு மகேஷ், சாய்ராம் நிறுவனத்தின் சாய்பிரகாஷ், சுட்டி அரவிந்த் உள்ளிட்ட திரைப்பிரலங்கள் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களையும் தனித்தனியே ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

    • நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    கேப்டன் மில்லர் - தனுஷ்

    கேப்டன் மில்லர் - தனுஷ்

    இந்நிலையில், தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வாரத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அதில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    • இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட்.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.


    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இதையடுத்து லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் முதல் பாடலான 'சலனா' பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 




    • நடிகர் விஜய் 10,12-ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார்.
    • மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.


    தற்போது 10, 12-ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17-ஆம் தேதி விஜய் சந்திக்கிறார். அப்பொழுது 10,12-ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிகழ்ச்சியின் போது பொதுவெளியில் பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விழாவில் கலந்துகொள்ளும் 5000 பேருக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் ராமராஜன் தற்போது ‘சாமானியன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இதைத்தொடர்ந்து இவரின் 46-வது படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் குமார் இயக்குகிறார்.

    தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ராமராஜன் 'சாமானியன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ராகேஷ் இயக்குகிறார். இந்த படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


    அந்த வகையில் 7 ஆத்ரி பிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கிறார். ராமராஜனின் 46-வது படமான இந்த படத்தை 'சாமானியன்' படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் இயக்குவதோடு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தின் மூலம் கார்த்திக் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'சாமானியன்' படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் வி.மதியழகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். 'சாமானியன்' படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இளையராஜா இசையமைக்கிறார்.


    இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் குமார் கூறியதாவது, ராமராஜன் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதனால் அவர் அதற்கான சரியான கதையை தேடியபோது, நான் எழுதியிருந்த 'சாமானியன்' கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. முழுக்க முழுக்க கதையை நம்பியே அவர் 'சாமானியன்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

    அந்த படத்தை முடித்ததும் என்னை அழைத்து, அடுத்ததாக இன்னொரு படம் பண்ண தயாராகி விட்டேன். உங்களிடம் ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார். அப்போது நான் சொன்ன ஒரு கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருடமாக 'சாமானியன்' படத்தில் கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குனர் போன்றே அவருடன் இணைந்து பயணித்து வந்துள்ளேன். அதனால் இந்த படத்தை நீங்களே இயக்கினால் நன்றாக இருக்கும் என என்னை உற்சாகப்படுத்தினார் ராமராஜன். அதனால் இந்த படத்தின் மூலம் நான் இயக்குனராகவும் மாறி உள்ளேன்.


    'சாமானியன்' படத்தின் கதை என் வாழ்க்கையில் 2018-ல் நான் சந்தித்த வலியை மையப்படுத்தி உருவானது. அந்த படத்திற்கு ராமராஜன் பொருத்தமாக இருந்தார். ஆனால் இந்த புதிய படத்திற்கு ராமராஜனை மனதில் வைத்தே கதையை உருவாக்கி உள்ளேன். இப்போது மக்களில் பலரும் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டது தான் இந்த கதையும். ஆனால் 'சாமானியன்' படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டும் வெவ்வேறாக இருக்கும்.

    இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளதுடன் நானே இயக்கத்தையும் கவனிப்பதால், வசனங்களை எழுதும் பொறுப்பை மதன் கார்க்கியிடம் கொடுக்கலாம் என பேசி வருகிறோம். அது உறுதியாகி, முழுமையான வசனங்கள் தயாரானதும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் துவங்க இருக்கிறோம். கதாநாயகியாக நடிக்க மீனா போன்ற முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.


    இதற்கு முன்னதாக இந்த படத்தை பூஜையுடன் துவங்கி டீசருக்கான பணிகளை செய்து வருகிறோம். இந்த டீசரை முடித்துவிட்டு இசைஞானி இளையராஜாவை சந்தித்து போட்டு காட்ட இருக்கிறோம். அதன்பிறகு இந்த படத்தில் டைட்டில், முதல் தோற்ற போஸ்டர், டீசர் ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.

    • இசை கலைஞர் சான் டி-யின் புதிய ஆல்பம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
    • 'லார்ட் போயட்ரி' (Lord Poetry) எனும் தலைப்பில் வெளியாகி இருக்கும் இந்த ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன.

    சினிமா படங்களின் பாடல்கள் எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்த்துள்ளதோ அந்த அளவிற்கு தற்பொழுது ஆல்பம் பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இசை கலைஞர் சான் டி-யின் புதிய ஆல்பம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'லார்ட் போயட்ரி' (Lord Poetry) எனும் தலைப்பில் வெளியாகி இருக்கும் இந்த ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன.


    அடென்டன்ஸ், மை நேம் இஸ், கழிவரா, மம்பிள், நோ ஜோக் மற்றும் லார்ட் போயட்ரி என ஆறு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சப்லையர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இருக்கும் 'லார்ட் போயட்ரி' ஆல்பம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    சான் டி-யின் முதல் ஆல்பம் 2021-ம் ஆண்டு வெளியானது. இந்த ஆல்பம் "நான் கத்துக்கிட்ட ஹிப்ஹாப்," எனும் பெயரில் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



    • பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி.
    • இவர் 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

    பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில், பிரபுதேவாவுடன் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் தற்போது 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.



    இந்தத் தொடரை இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார். இந்த வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை, ஜுஹு பகுதியில் அமைந்துள்ளது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் நடிகை ஷில்பா ஷெட்டி இத்தாலி நாட்டுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.



    இந்நிலையில், அவரது வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஷில்பா ஷெட்டியின் தரப்பில் ஜுஹு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைநகரம்-2’.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சுந்தர் சி. இவர் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ளார்.



    இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தலைநகரம்-2' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. மேலும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    தலைநகரம் 2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தலைநகரம்-2' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
    • இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.


    செந்தில் பாலாஜி

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.


    பிரார்த்தனை செய்த தாடி பாலாஜி

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வேண்டும் என்று நடிகர் தாடி பாலாஜி திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் ஜீவ சமாதியில் வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. எனக்கு அவர் சகோதரர் போன்றவர். அவருக்கு இந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டது ஒரு மனிதனாக எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் நிச்சயம் குணமடைந்து வருவார். அவர் விரைவில் குணமடைய வேண்டி மூக்குப்பொடி சித்தர் ஜீவ சமாதியில் பிரார்த்தனை செய்துள்ளேன்" என்று கூறினார்.

    • விஜய் ஆண்டனி இயக்கி நடித்த திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’.
    • இப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், இப்படத்தின் வெற்றி விழா விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது.


    பிச்சைக்காரன் 2 போஸ்டர்

    இந்நிலையில், 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் வருகிற 18-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    மாமன்னன் போஸ்டர்

    'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாமன்னன்' படத்தின் டிரைலர் நாளை (ஜூன் 16) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி வருபவர் வைரமுத்து.
    • இவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாடல் ஒன்று எழுதியுள்ளதாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

    1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.


    வைரமுத்து

    வைரமுத்து

    இந்நிலையில் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாடல் ஒன்று எழுதியுள்ளதாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில்,

    கலைஞர் நூற்றாண்டுக்கு

    ஒரு புகழ்ப்பாட்டு

    எழுதியிருக்கிறேன்

    ஜிப்ரான் இசையில்

    யாசின் பாட

    நேற்று ஒலிப்பதிவு செய்தோம்

    இது

    தமிழ்நாட்டரசின் தயாரிப்பு

    விரைவில்

    தமிழ்கூறு நல்லுலகுக்கு...

    என்று பதிவிட்டுள்ளார்.

    ×