என் மலர்
சினிமா செய்திகள்
- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ்.
- இவர் பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவராக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த இடத்திற்கு சென்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி வைத்துள்ளார்.

ஆரம்பகாலக் கட்டத்தில் உருவ கேலிகளை சந்தித்த தனுஷ் அதன்பின் தனது கடுமையான உழைப்பால் மாபெரும் வெற்றிகளை சந்தித்தார். இவருக்கு சமீபத்தில் யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. மேலும், நடிகர் தனுஷ் வருகிற 28-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தனுஷ் ரசிகர்கள்
இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பொதுமக்களுக்கு உணவளித்து வருகின்றனர். அதாவது, சென்னை சாலிக்கிராமத்தில் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாடானது தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'ரெடியா?' என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் செம்ம அப்டேட்டை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார். அதன்படி இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்தின் வெளியீட்டை பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்று (ஜுன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படம் வெளியான தியேட்டர்களில் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். தங்களின் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், பிரபாசின் தீவிர ரசிகர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள யெம்மிகனூரில் மாட்டு வண்டி பேரணி நடத்தினர்.

பேரணி நடத்திய ரசிகர்கள்
அதில் 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்துள்ள பிரபாசின் போஸ்டர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரபாஸ் ராமர் வேடத்தில் இருக்கும் பிரமாண்ட கட் அவுட்டுகள் மாட்டு வண்டியில் இடம் பெற்றிருந்தன. பிரபாஸைப் புகழ்ந்து ரசிர்கள் கோஷம் எழுப்பினர். பெரிய திரையில் தெய்வீக ராமர் கதாப்பாத்திரத்தை சித்தரிக்க அவர்தான் சரியான தேர்வு. வாழும் கடவுள் என்று ஆர்வத்துடன் முழக்கங்களை எழுப்பினர்.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சமூக வலைதளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, லோகேஷ் கனகராஜ் 'ரெடியா?' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. மேலும், இதற்கு முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார் ரோபோ சங்கர்.
- நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ரோபோ சங்கர் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் உடல் எடை குறைந்தது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "என் உடம்பை நான் குறைத்ததற்கு காரணம் சினிமாவிற்காக தான், அதுமட்டுமல்லாமல் எனக்கு இடையில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. ஐந்து மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்தேன் சாவின் விளிம்பிற்கே சென்று விட்டேன். அதற்கு காரணம் என்னிடம் இருந்த சில கெட்ட பழக்கங்கள். நான் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன்.
தற்போது உங்களுக்கு நான் பெரிய உதாரணமாக இருக்கிறேன். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றுவிட்டேன். கடந்த ஜனவரி மாதம் எனக்கு வாழ்க்கையை வெறுத்து அந்த பழக்க வழக்கம் இல்லாமல் இருக்க முடியாத நிலையில் இருந்தேன். நடு இரவில் பைத்தியம் போன்று வீட்டில் திரிந்தேன்.

அந்த நேரம் மருத்துவர்களை சந்தித்ததன் மூலம் என் உடம்பில் இருந்த மஞ்சள் காமாலை மற்றும் கெட்ட பழக்கங்களால் எந்த பகுதிகள் எல்லாம் சேதம் ஆகியுள்ளன என்பதை எல்லாம் பார்த்து மருத்துவரின் ஆலோசனையை கேட்டு எல்லா பழக்கத்தையும் விட்டேன். இரவு பகலாக என் குடும்பம் தான் என்னை முழுவதும் கவனித்து கொண்டார்கள். எத்தனையோ நண்பர்களின் பிரார்த்தனைகளால் தான் நான் இங்கு நிற்கிறேன்" என்று கூறினார்.
- நடிகர் செல்வராகவன், விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இவர் அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் செல்வராகவன். படம் இயக்குவது மட்டுமில்லாது நடிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் பீஸ்ட், சாணிக் காயிதம், பகாசூரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் செல்வராகவன், சமூக வலைத்தளத்தில் மலையாள இசை குறித்து பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தி ஈர்த்து வருகிறது. அதில், "கடந்த சில வருடங்களாக நான் மலையாள மொழி இசை, திரைப்படங்கள் மற்றும் இண்டி இசைக்கு மிகவும் அடிமையாகிவிட்டேன், அதன் ஏற்பாடுகள் மற்றும் குரல்களின் தரம் மனதைக் கவர்கிறது. எப்பொழுதும் புதிய ஒலிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவர்களின் தேடல் அலாதியானது" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘போர் தொழில்’.
- இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.

இந்நிலையில், 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை நடிகர் சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "வலுவான புலனாய்வு திரைக்கதை கொண்ட போர்த்தொழில் திரைப்படத்தில் பயணித்த அனுபவமும், ரசிகர்களின் வரவேற்பும், பாராட்டும் மனதிற்கு மிகுந்த உற்சாகமளிக்கிறது. அசோக் செல்வனை முதல்முறை சந்தித்த போது, "Love at First Sight" என்று சொல்வது போல, உண்டான உணர்வு விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.

கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
கமலா திரையரங்கில் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடிய தருணத்தில், எங்களுக்கு முன்பாக இருந்த பார்வையாளர்களின் முகங்களில் எழுந்த உற்சாகம், அன்பைகாணும் போது வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. இத்திரைப்படத்தை சிறப்பாக உருவாக்கி அர்ப்பணித்த அத்தனை நல்உள்ளங்களுக்கும் நன்றி, நன்றி!!!" என்று பதிவிட்டுள்ளார்.
வலுவான புலனாய்வு திரைக்கதை கொண்ட போர்த்தொழில் திரைப்படத்தில் பயணித்த அனுபவமும், ரசிகர்களின் வரவேற்பும், பாராட்டும் மனதிற்கு மிகுந்த உற்சாகமளிக்கிறது. அசோக் செல்வனை முதல்முறை சந்தித்த போது, "Love at First Sight" என்று சொல்வது போல, உண்டான உணர்வு விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் இந்த… pic.twitter.com/pQYH1CpiJO
— R Sarath Kumar (@realsarathkumar) June 15, 2023
- இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
- இப்படம் இன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்று (ஜுன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

நெட்டிசன்கள் பகிர்ந்த காட்சிகள்
இந்நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 500 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான படமா இது..? ஒரு படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு 'ஆதிபுருஷ்' திரைப்படம் எடுத்துக்காட்டாக உள்ளது என்று சமூக வலைதளத்தில் காட்சிகளை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
- 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் நாளை சந்திக்கிறார்.
- இந்த நிகழ்ச்சிக்காக இன்று முதலே நீலாங்கரை பகுதியில் சுவர் ஓவியங்கள் அலங்கார ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது.
இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து இந்த சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்க இருக்கிறார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நாளை நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள், மாணவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.
நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக இன்று முதலே நீலாங்கரை பகுதியில் சுவர் ஓவியங்கள் அலங்கார ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தனது கட்அவுட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று விஜய் தரப்பில் கூறப்பட்டிருப்பதால் சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.
இது பற்றி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியதாவது:-
மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் வந்து மேல்மருவத்தூர், தாம்பரம் பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட 2 மண்டபங்களில் வந்து தங்கி தயாராகி விடுவார்கள். அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை அடைந்து விடுவார்கள்
அனைவருக்கும் சினாக்ஸ், தண்ணீர் பாட்டில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி சரியாக 1 மணிக்குள் அனைவருக்கும் 12 வகை காய்கறிகளோடு சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- சமந்தா தற்போது குஷி மற்றும் சிட்டாடல் படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
- மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிறதாக சமந்தா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சாகுந்தலம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

யசோதா படத்தின் புரொமோஷன் பணிகளில் கலந்து கொண்ட சமந்தா ஒரு நேர்காணலில் தனக்கு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதன்பின்னர் அதிலிருந்து தான் மீண்டு வருவதாக தெரிவித்து, தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுப்பட்டார். தற்போது குஷி மற்றும் சிட்டாடல் படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் சமந்தா மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ளதை உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் நிறைய பிரார்த்தனைகள், பூஜைகள் செய்தேன். ஆசிர்வாதங்களையும், பரிசுகளையும் கேட்டு அல்ல, வலிமையையும், அமைதியையும் கொடுக்க வேண்டினேன். எதுவும் நாம் நினைத்தது போல் நடக்காது என்பதை இந்த ஒரு வருட காலம் எனக்கு உணர்த்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.
- மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
- இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற "ஆழி மழைக்கண்ணா" வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஹரினி குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
- இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்நிலையில் மாமன்னன் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது. வடிவேலு மற்றும் உதயநிதியின் முகங்கள் தையல் போட்டிருக்கும் படி வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.






