என் மலர்
சினிமா செய்திகள்
- விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'.
- இப்படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.
அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாயும் ஒளி நீ எனக்கு
சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் அதிகபடியான வெளிச்சம் இருந்தா தான் அரவிந்துக்கு கண்ணு தெரியும். உன்ன சமந்தப்பட்ட எல்லோருக்கும் கொடூரமான சாவு காத்திட்டு இருக்கு போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த டிரைலர் பலரையும் கவர்ந்து யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.
பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படம் வருகிற ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து மாணவர்களையும் தனித்தனியாக சந்தித்து நடிகர் விஜய் விருதுகளை வழங்கினார்.
- இறுதியில், வாரிசு ஸ்டைலில் பிளையிங் கிஸ் கொடுத்த நடிகர் விஜய் விடைபெற்றார்.
சென்னை:
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் நடத்தி வரும் கல்வி விருது வழங்கும் விழா 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இறுதியில், வாரிசு ஸ்டைலில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த நடிகர் விஜய் விடைபெற்றார்.
- மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.
- விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். இந்த செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாணவ- மாணவிகளுக்கு பரிசளித்த விஜய்
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது மாணவி ஒருவர், "தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக வரவேண்டும். நாங்கள் போடும் முதல் வாக்கை நீங்கள் மதிப்புமிக்கதாக மாற்றி தரவேண்டும். அந்த வாக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும். உங்களுடைய ஒவ்வொரு படமும் நல்ல கருத்துகளை சொல்லியிருக்கிறது. ஒரு வாக்கு எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் படத்தில் காண்பித்திருப்பீர்கள் அது எங்களுக்கு ஊக்கமாக இருக்கிறது" என்று கூறினார்.
- நடிகர் விஜய் இன்று மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
- இந்த நிகழ்வானது சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். இந்த செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய விஜய்
இந்நிலையில், நடிகை கஸ்தூரி, விஜய் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "Hats off தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் பாராட்டுக்குரியது. இனி அடுத்து என்ன என கூர்ந்து கவனிக்கும் தமிழகம். ஜூன் 22-இல் பெரிதாக எதிர்பார்க்கலாமா..?" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- சென்னையில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
- இதில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.
இவரின் செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கவிஞர் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "அரசியலுக்கு நான் வருவேனா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியும். நடிகர்கள் வருவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் சொல்வது சரியாக இருக்காது" என்று கூறினார்.
- நடிகர் விஜய் மாணவ- மாணவிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கினார்.
- இந்த நிகழ்வானது இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.

விழாவில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சமுதாயத்தை தட்டி எழுப்பும் வகையில் விஜய்யின் சீரிய சிந்தனையில், உதிர்த்த கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட் டத்தை விஜய் நேரடியாக தொடங்கி வைப்பது நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும்.
விஜய் எங்களுக்கு சொல்வது முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். அடுத்த படியாக தொழிலை பார்க்க வேண்டும். தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சதவீதமோ, 2 சதவீதமோ முடிந்தால் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும், கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரே தலைவர் விஜய். இவ்வாறு அவர் பேசினார்.
- நடிகர் விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கினார்.
- இந்த நிகழ்ச்சியானது சென்னை, நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.
இந்நிலையில், விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த ஒரு மாணவியின் பெற்றோர் கூறியதாவது:- 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர் வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குவது மிகவும் நல்ல விஷயம். தமிழ்நாட்டில் இந்த மாதிரி நல்லவர்கள் வந்து தமிழகத்துக்கு முன்னேற்றம் வந்தால் நன்றாக இருக்கும்.
நடிகர் விஜய் கல்விக்காக முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் நல்ல விஷயம். விஜய் அரசியலுக்கு வரட் டும். வந்தால் நல்லதுதான். இவரை போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'எந்திரன்'.
- இப்படத்தின் கதை திருட்டு வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்றும் தமிழில் வெளியான 'ஜூகிபா' என்ற தனது கதையை தழுவி எடுக்கப்பட்டதாகவும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிபதி உத்தரவு
அதாவது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். சவுந்தர் இந்த தீர்ப்பில் மனுதாரரின் கதைக்கும் 'எந்திரன்' படத்தின் கதைக்கும் அதிக அளவு வேறுபாடுகள் இருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் வழக்கின் செலவை மனுதாரர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீண்ட காலமாக நடந்து வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உங்கள் சுய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.
- முடிந்த வரை படியுங்கள், எல்லோரையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது.
விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும், பொதுத்தேர்வில் சாதனை படைத்த எனது நண்பா, நண்பிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும், மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய வணக்கம்.
நான் நிறைய ஆடியோ வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழாக்களில் பேசி இருக்கிறேன். இது போன்ற விழாவில் நான் பேசுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.
எனது மனதுக்கு ஏதோ ஒரு பொறுப்புணர்ச்சி வந்தது போல் நான் உணருகிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான உங்களை போன்றோரை சந்திப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோசம்.
என்னில் உன்னை காண்கிறேன் என்ற ஒரு ஈர்ப்பு இருக்கிறது. உங்கள் எல்லோரையும் பார்க்கும்போது எனக்கு பள்ளி நாட்கள் தான் ஞாபகத்துக்கு வந்து போகிறது. நான் உங்களைபோல அவ்வளவு புத்திசாலி மாணவர் இல்லை.
ஒரு ஜஸ்ட் பாஸ் மாணவன் தான். நான் நடிகர் ஆகவில்லை என்றால் அப்படி ஆகி இருப்பேன், இப்படி ஆகி இருப்பேன், டாக்டர் ஆகி இருப்பேன் என்று சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. என்னுடைய கனவெல்லாம் சினிமா, நடிப்புதான். அதை நோக்கிதான் என்னுடைய பயணம் போய்க்கொண்டி ருக்கிறது.
ஒரு வேளை... சரி அதை விட்டு விடுங்கள், அது இப்ப எதுக்கு... அது வேண்டாம்.
இதுபோன்ற ஒரு விழாவை ஏற்பாடு செய்ததற்கு ரொம்ப முக்கிய காரணம் சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு அழகான வசனம் நான் கேட்டேன். கார்டு இருந்தால் எடுத்துகிடுவானுங்க, ரூபா இருந்தா பிடுங்கிடுவானுங்க, ஆனா படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது.
அது என்னை ரொம்ப பாதித்த வரியாக இருந்தது. இது 100-க்கு 100 உண்மை மடடும் அல்ல. இதுதான் யதார்த்தமும் கூட. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்விக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்பது ரொம்ப நாளாக எனது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதற்கான நேரம் தான் இது என்று நினைக்கிறேன்.
இதற்காக உழைத்த தமிழ்நாடு முழுக்க இருக்கிற ஆசிரியர்கள், ஒவ்வொரு ஊரிலும் முதல் 3 மாணவ-மாணவிகளை கண்டுபிடித்து இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து ஏற்பாடு செய்த எனது மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஆனந்துக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க்கையில் இலவசமாக கிடைப்பது அறிவுரை தான். அதுஉங்கள் எல்லோருக்கும் சுத்தமாக பிடிக்காது என்று எனக்கு தெரியும்.
படி, படி, படிப்பு, படிப்பு இந்த இரண்டையும் தாண்டி வேறு என்ன பேசுவது என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு பிடித்த 2, 3 விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு பிடித்து இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விட்டு விடுங்கள். இது நட்பு கலந்துரையாடல் தான். போரடித்தால் சொல்லுங்கள். உடனே நிறுத்திக் கொள்கிறேன்.
பள்ளிக்கு செல்கிறோம். கல்லூரிக்கு செல்கிறோம் டிகிரி வாங்குகிறோம். அது மட்டுமே ஒரு முழுமையான கல்வி ஆகிவிடாது என்பதற்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்ன ஒரு விஷயம் தான். நாம் பள்ளிக்கு போய் படித்தது, கற்றுக்கொண்டது எல்லாமே மறந்த பிறகு எது எஞ்சி இருக்கிறதோ அதுதான் கல்வி என்று சொன்னார்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்று முதலில் புரியவில்லை. அப்புறம் போக போக கொஞ்சம் புரிந்தது. எனக்கே புரியும்போது உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாய் புரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் படிக்கும்போது இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், பொருளியல் எல்லாவற்றையும் நீக்கி விட்டு எது மிஞ்சி இருக்கும். உங்களுடைய கேரக்டர், உங்களுடைய சிந்திக்கும் திறன்.
நாம் படிக்கணும், பரீட்சை இருக்கிறது. மதிப்பெண், தரவரிசை எல்லாமே முக்கியம்தான். ஆனால் அதைதாண்டி உங்களுடைய கேரக்டருக்கும், சிந்திக்கும் திறனுக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால்தான் அது ஒரு முழுமையான கல்வியாக ஆகும்.
உதாரணமாக கேரக்டர் பற்றி ஒரு அழகான வரி இருக்கிறது. நீங்கள் பணத்தை இழந்து விட்டால் நீங்கள் எதையுமே இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்தால் எதையோ ஒன்றை இழக்கிறீர்கள். ஆனால் குணத்தை இழந்து விட்டால் நீங்கள் எல்லாவற்றையும் இழந்து விடுகிறீர்கள்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இவ்வளவு நாள் வரைக்கும் நீங்கள் உங்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன், வீட்டில் தங்கி பள்ளிக்கு போய் இருப்பீர்கள். இப்போது நீங்கள் வேறு வேறு ஊருக்கு போவீர்கள். வேறு பள்ளி, கல்லூரிகளில் உங்களுக்கு சீட் கிடைக்கும். விடுதிகளில் தங்கி படிப்பீர்கள். புதுப்புது நண்பர்கள் கிடைப்பார்கள்.
முதல் தடவையாக உங்கள் பெற்றோரின் கண்காணிப்பில் இருந்து வெளியில் போய் வேறு ஒரு வாழ்க்கைக்கு போகிறீர்கள். அங்கு ஒரு சுதந்திரம் ஒன்று கிடைக்கும் பாருங்க. அதை சுயகட்டுப்பாட்டுடன் பக்குவமாக கையாளுங்கள். ஒழுக்கம் என்று சொல்வதால் நீங்கள் வாழ்க்கையை என்ஜாய் செய்யக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. வாழ்க்கையை நன்றாக என்ஜாய் பண்ணுங்கள். அது ரொம்ப ரொம்ப முக்கியம்.
அதே நேரத்தில் உங்கள் சுய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.
நமது வாழ்க்கை நமது கையில்தான் என்பதை மனதின் ஒரு பக்கத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதை அவ்வப் போது எடுத்து ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
குணத்தை பற்றி பேசியதுபோல சிந்திக்கும் திறனை பற்றி பேசுவோம். என்னை விட உங்கள் அனைவருக்கும் தற்போதைய தகவல்கள் வரை நன்றாக தெரிந்திருக்கும். வாட்ஸ்அப், முக நூல், இன்ஸ்டாகிராம், ஷேர்சாட் என எல்லாவற்றிலும் வரும் தகவல்களில் முக்கால்வாசி போலியானவை தான். சமூக வலைதளத்தில் வரும் தகவல்களில் எதை எடுத்துக் கொள்ளலாம், எதை விட்டு விடலாம், எதை நம்பலாம், எதை நம்ப வேண்டாம், எது உண்மை, எது பொய் என்பதை கண்டறிய உங்கள் பாட புத்தகங்களை தாண்டி நீங்கள் படிக்க வேண்டும்.
சரி உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. நீயெல்லாம் அறிவுரை சொல்ல வந்து விட்டாய் என்கிறீர்களா?
நான் ஒத்துக்கொள்கிறேன். எனக்கு முன்பு வாசிக்கும் பழக்கம் இல்லை. சமீப காலமாக அது வந்திருக்கிறது. படிப்பதை விட படித்த விஷயத்தை யாராவது சொல்லி கேட்கும்போது எளிதாக கனெக்ட் ஆகும் என்பார்கள். நான் அந்த ரகம்.
என்னிடம் கதை சொல்ல வரும்போது பெரிய பைண்டிங் செய்த பைலில் கதையை கொண்டு வந்து படியுங்கள் என்பார்கள். நமக்கு அது சரிப்பட்டு வராது, நீங்கள் சொல்லுங்கள், எனக்கு எளிதாக கனெக்ட் ஆகும் என்று சொல்லுவேன். அந்த மாதிரி ரகத்தில் நான் இருந்தேன்.
முடிந்த வரை படியுங்கள், எல்லோரையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லா தலைவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்காரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், பெரியாரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், காமராஜரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள், மற்றவற்றை விட்டு விடுங்கள். இதுதான் இன்று உங்களுக்கான செய்தி.
நிறைய பேர் சொல்லி ஒன்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். உன் நண்பனை பற்றி சொல், நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்று. எனக்கு தெரிந்தது இப்போது அதெல்லாம் மாறி விட்டது என்று நினைக்கிறேன். நீ எந்த சமூக வலைதள பக்கத்தை பின் தொடர்கிறாய் என்று சொல், நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்பது தான் இன்றைய புதிய பழமொழி.
நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து நல்ல நல்ல புதிய தலை வர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். ஆனால் நமது விரலை வைத்து நமது கண்ணையே குத்துவது என்று கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தான் இப்போது நாமும் செய்து கொண்டிருக்கி றோம்.
காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். ஒரு ஓட்டு 1000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோமே, ஒரு தொகுதியில் 1.50 லட்சம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் ரூ.15 கோடி ஆகும். ஒருவர் ரூ.15 கோடி செலவு செய்கிறார் என்றால், அவர் அதற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். பொதுவாக யோசித்து பாருங்கள்.
மாணவர்களின் பாடத் திட்டத்தில் இதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஒவ்வொரு மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோரிடம் சென்று அப்பா, அம்மா இனிமே காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்லி பாருங்க.
சும்மா முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் சொன்னால் அது கண்டிப்பாக நடக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் அடுத்தடுத்த வருடங்களில் முதல் முறை வாக்காளர்களாக வரப் போகிறீர்கள். இதை ஏன் நான் கனெக்ட் பண்ணி சொல்கிறேன் என்றால், இது எப்போது நடக்கிறதோ? அப்போதுதான் உங்களுடைய கல்வி முறையே முழுமை அடைந்த தாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
ஒரு சிறிய வேண்டுகோள். உங்களுடைய வகுப்பிலோ, உங்களுடைய தெருவிலோ தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் என்று இருப்பார்கள் அல்லவா? அவர்களுடன் அவ்வப்போது நேரம் செலவிடுங்கள். அவர்களுக்கு அந்த தைரியத்தை கொடுங்கள். தேர்வில் வெற்றி பெறுவது எவ்வளவு சுலபம் என்று எடுத்து சொல்லுங்கள்.
தோல்வி அடைந்த அவர்கள், நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் அவர்கள் வெற்றி அடைந்தால் அது நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசாக எடுத்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
தோல்வி அடைந்தவர்கள் சீக்கிரமாகவே வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் எந்த சூழ்நிலையிலும், எந்த தவறான முடிவுகளும் எடுக்காமல் வாழ்க்கையில் முன்னேறி செல்ல எனது வாழ்த்துக்கள். நீங்கள் நினைப்பதை தைரியமாக முன்னெடுத்து செய்யுங்கள்.
உங்களை அவமானப்படுத்த செய்ய ஒரு கூட்டம் கண்டிப்பாக இருக்கும். உன்னால் இது முடியாது, உன்னால் அது முடியாது, இது சரியில்லை, அது சரியில்லை, இது ஓடாது எல்லாம் சொல்வார்கள். அதையெல்லாம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உனக்குள் ஒருவன் இருப்பான், உனக்குள் ஒருத்தி இருப்பாள், அவன் என்ன சொல்கிறான், அவள் என்ன சொல்கிறாள் அதை மட்டுமே கேளுங்கள். வந்த அனைவருக்குமே நன்றிகள். வளர்ப்போம் கல்வி. வளர்க எங்கள் குட்டி நண்பா, நண்பிகள்.
இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.
- நடிகர் விஜய் இன்று மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்குகிறார்.
- இதற்கான ஏற்பாடு நீலாங்கரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.
இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்க இருக்கிறார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்கப்பட்டது. பெற்றோர்கள், மாணவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.

விஜய்க்கு பரிசளித்த மாற்றுத் திறனாளி மாணவன்
இந்த நிகழ்ச்சிக்காக தனது கட்அவுட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று விஜய் தரப்பில் கூறப்பட்டிருப்பதால் சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ரசிகர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது இல்லத்திலிருந்து நீலாங்கரை மண்டபத்திற்கு காரில் சென்றார். இவருடன் ரசிகர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்றனர்.பின் அவர் நீலாங்கரை தனியார் அரங்கத்திற்கு சென்றார். அங்கு விஜய்க்கு மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் பரிசு வழங்கினார்.
இதையடுத்து மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசி வருகிறார்.
- நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லியோ
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடல் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

லியோ
இந்நிலையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர்.
அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’.
- இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் படக்குழுவினருக்கு தலா ரூ. 10,000 அன்பளிப்பாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






