என் மலர்
சினிமா செய்திகள்
- மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய நிகழ்ச்சியில் விஜய் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது.
- அப்பொழுது பெரியார், அம்பேத்கர், காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று விஜய் பேசியிருந்தார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், நேற்று முன்தினம் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கினார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் இது குறித்து அவருடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது நல்ல விஷயம், அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது; பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை முன்னுதாரனமாக வைத்து அவர் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
- இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருவதாக பதிவிட்டிருந்தார்.

கவுதம் மேனன்
இந்நிலையில் ஹாரிஷ் ஜெயராஜ் கான்சர்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தின் சில விஷயங்களை இயக்குனர் கவுதம் மேனன் பகிர்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், இப்படத்திற்காக 3 பாடல்களை ஹாரிஷ் ஜெயராஜ் கம்போஸ் செய்துள்ளதாகவும், பாடல்களை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதில் வாரணம் ஆயிரத்தில் இடம்பெற்று வரவேற்பை பெற்ற 'அஞ்சல' பாடல் போன்ற ஒரு பாடலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- தெலுங்கில் பிரபல நடிகர்களான வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ராம்பாபு, பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் ராகேஷ் மாஸ்டர்.
- ராகேஷ் நேற்று மாலை உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரபல திரைப்பட நடன இயக்குனர் ராகேஷ் மாஸ்டர் (வயது 53). திருப்பதியில் பிறந்த இவரது இயற்பெயர் ராமா ராவ். திரைப்பட நடன இயக்குனரான பிறகு இவரது இயற்பெயரை ராகேஷ் என மாற்றிக் கொண்டார். கடந்த வாரம் படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் மற்றும் பீமாவரம் சென்று இருந்தார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராகேஷ் நேற்று மாலை உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு தெலுங்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராகேஷ் மாஸ்டர் தெலுங்கில் பிரபல நடிகர்களான வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ராம்பாபு, பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 1500 திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
- இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், அடுத்த நாளில் ரூ.100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தடுத்த நாட்களில் ரூ.300 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கப்பட்டது.
- இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது, கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா'. இளைய தளபதி விஜய் உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா'
— Seenu Ramasamy (@seenuramasamy) June 18, 2023
இளைய தளபதி @actorvijay
உங்களை வாழ்த்துகிறேன்.
தங்கள் நடிப்பில்
புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல்
தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின்
Content Based Realistic படங்களை
தயாரித்து
சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர… pic.twitter.com/GJRZovMIxV
- விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் சில விஷயங்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லியோ
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடல் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், லியோ படத்தின் காட்சிகளை பார்த்த இசையமைப்பாளர் அனிருத், இந்த படம் எந்த லெவல் போகும்னு தெரியாது. அந்த மாதிரி இருக்கு. நீங்க கண்ண மூடிட்டு எவ்வளோ பெரிய ப்ளாக் பஸ்டர் ஆகும்னு யோசிக்கலாம் என்று தயாரிப்பாளர் லலித் குமாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கப்பட்டது.
- இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். அவர் வேற, நான் வேற. எங்களுக்கு இடையேயான பந்தம் அண்ணன்-தம்பி மட்டும் தான். நான் பேசுவதை தான் தம்பி பேசியிருக்கிறார். அது எனக்குத்தான் வலிமை சேர்க்கும். என் ஓட்டை நடிகர் விஜயால் பிரிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
- கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தருணம்'.
- இப்படத்தை தேஜாவு பட இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கி வருகிறார்.
'தேஜாவு' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இந்நிலையில், 'தருணம்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ, பயத்தில் இருக்கும் ஸ்மிருதி வெங்கட்டுக்கு கிஷன் தாஸ் லிப் கிஸ் கொடுப்பது போன்று இடம்பெற்றுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
- சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள 'ரெஜினா' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ரெஜினா'. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. 'ரெஜினா' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் தீனா பாக்ஸர் தீனாவாகவும், விவேக் பிரசன்னா எஸ்.ஐ.வினாயக்காக நடித்துள்ளதாக தெரிவித்து போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.
- வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தமன்னா.
- தமன்னாவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

தமன்னா
மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' விரைவில் வெளியாகவுள்ளது. தமன்னா தற்போது இந்தியில் நடித்துள்ள "ஜீ கர்தா" என்ற சீரிஸில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார். இந்நிலையில் தமன்னா கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
- விஜய் நேற்று நிகழ்ச்சியில் அசூரன் பட வசனம் பேசியிருந்தார்.
- இது குறித்து வெற்றிமாறனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் விஜய் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில், சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு அழகான வசனம் நான் கேட்டேன். கார்டு இருந்தால் எடுத்துகிடுவானுங்க, ரூபா இருந்தா பிடுங்கிடுவானுங்க, ஆனா படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது என்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசூரன் பட வசனத்தை விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறனிடம், அசூரன் படத்தில் இடம்பெற்ற வசனத்தை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் பேசியிருந்தார், இதனை எவ்வளவு முக்கியமானதாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது? இதற்கு வெற்றிமாறன் அளித்த பதில், ஒரு சினிமாவில் நாம் சொல்கின்ற ஒரு விஷயம், சமூகத்துல மிக முக்கியமான ஒரு நபரிடம் போய் சென்றடையும் பொழுது அதனுடைய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு மிக பெரிய உதாரணம் தான் இது.

மேலும் அம்பேத்கர், பெரியாரை படிக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார் என்ற கேள்விக்கு, அந்த மேடையில் அவர் சொன்னது, அனைவரும் அவர்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அம்பேத்கர், பெரியார், காமராஜர் மற்றும் அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
- விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த நிகழ்வு குறித்து சமக தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

விஜய்
இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நடிகர் விஜய் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் கல்விக்கு உதவுவது வரவேற்கத்தக்கது. எல்லா நடிகர்களும் பொதுநல சேவையில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர் மன்றம் மூலம் உதவிகளை செய்து வருகின்றனர். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

சரத்குமார்
நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து வருகிறேன். வரும் 2026 தேர்தலை எப்படி சந்திக்கனும் என்று திட்டங்களை வகுத்து வருகிறேன். அனைவரும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவசியம். அரசியல் ஞானம் 14 வயதில் இருந்தே பள்ளி பாடத்திட்டத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதனால் யார் அரசியலுக்கு வந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.






