என் மலர்
சினிமா செய்திகள்
- பிரபாஸ், சயீப் அலிகான், கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் “ஆதிபுருஷ்”.
- இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் அதே சமயத்தில் எதிர்பார்ப்பும் தொடர்சியாக கிளம்பி வருகிறது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து வெளியான படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் அதே சமயத்தில் எதிர்பார்ப்பும் தொடர்சியாக கிளம்பி வருகிறது. இப்படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் "ஆதிபுருஷ் படத்தில் ராமர், அனுமனை விடியோ கேம் கதாபாத்திரம் போல சித்தரித்தும் அவதூறு செய்யும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பது உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது. சனாதன தர்மத்தை அவமதிக்கு இந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதிபுருஷ் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
- ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது.
- இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நடிகர் ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 11 ஆண்டுகள் கழித்து தங்களது முதல் குழந்தை பெற்று கொண்டதால் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ் பாபு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்ர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன் -2’.
- இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகளை சித்தார்த் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் உலகப்போர் நடிகரின் கைவசம் ஒரு படம் மட்டுமே இருக்கிறதாம். இவர் பொதுவாக பொது விழாக்களில் கலந்துக் கொள்ள மாட்டாராம். அப்படி இருக்கும் பட்சத்தில் இவர் சமீபத்தில் ஒரு நடிகரின் திருமண விழாவிற்கு சென்றாராம். அப்போது அவருடன் ஒரு இளம் பெண் சென்றிருக்கிறாராம்.
இதைப்பார்த்த பலரும் நடிகரின் காதலி அவர் என்று பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இதைக்கேட்ட நடிகரும் கண்டுக்கொள்ளாமல் சென்று விட்டாராம். நடிகரின் இந்த மௌனம், அவருடன் வந்த பெண் காதலிதான் என்று பலரும் உறுதி செய்து விட்டார்களாம்.
- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘கேப்டன் மில்லர்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவராஜ்குமார் நிறைவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.
- இவர் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "ஒரு அடார் லவ்" என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

"ஒரு அடார் லவ்" படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்துள்ளார். பிரியா வாரியர் தொடர்சியாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை பிரியா வாரியர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, "ஸ்வீட் ஏஞ்சல் ஓ மைன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லியோ.
- இப்படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து கொண்டார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நிறைய படங்கள் இயக்க வேண்டும். நீண்ட நாட்கள் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற எந்தத் திட்டமும் இல்லை. நான் தற்போது இந்த யூனிவர்ஸ் முயற்சித்ததற்கு நடிகர்கள், தயாரிப்பாளரகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், அது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. என்ஓசி வாங்க வேண்டும் என நிறைய குழப்பங்கள் உண்டு.

இந்த யூனிவர்ஸுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நியாயம் சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். எல்சியு-வில் 10 படங்கள் இயக்கிவிட்டு அதிலிருந்து வெளியேறிவிடுவேன். லியோ படத்தில் விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் 10 நாட்களில் விஜய் உடனான படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பு இருக்கிறது. விஜய்யை மிஸ் செய்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. எல்சியூ-வுக்கு கீழ் 'லியோ' வருமா என்பதை அறிய காத்திருங்கள்" என்றார்.
- ராம் சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
- இந்த தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் தட்டி சென்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராம் சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் தனது மனைவி உபாசனா கர்பமாக இருப்பதாக ராம் சரண் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது. ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த தம்பதிக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- 17 திரையரங்கங்களின் வாசலில் போலீசார் நிறுத்தப்பட்டு இந்தி படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
- ஜானகி இந்தியாவின் மகள் எனும் வசனம் நீக்கப்படும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் புராணங்கள், "ராமாயணம்" மற்றும் "மகாபாரதம்". இவை இந்துக்களின் புனித நூல்களில் மிகவும் மதிக்கப்படுகின்ற காவியங்களாகும். இந்தியாவெங்கும் ராமாயணத்தை தழுவி 1950களிலிருந்தே பல மொழிகளில், பல திரைப்படங்கள் வந்து அவை பெரும் வெற்றியை பெற்றிருக்கின்றன.
கடந்த வாரம், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்த "ஆதிபுருஷ்" எனும் திரைப்படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. இத்திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானதால், இந்தியா முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் கூடியிருந்தது.
ஆனால், இத்திரைப்படம் வெளியான இரு தினங்களுக்குள்ளேயே இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. பல இடங்களில் திரையரங்க வாசல்களில் போராட்டங்களும் நடைபெறுகின்றன. சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் போராட்டம் நடைபெற்றது.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலும், சுற்றுலா தலமான பொகாராவிலும், இத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை காரணமாக எல்லா இந்தி திரைப்படங்களுமே தடை செய்யப்பட்டுவிட்டன. 17 திரையரங்கங்களின் வாசலில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு இந்தி படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
"ஜானகி இந்தியாவின் மகள்" எனும் வசனம் இந்தியாவிலும், நேபாளத்திலும் இப்படத்திலிருந்து நீக்கப்படும் வரையில் எந்த இந்தி திரைப்படமும் காத்மாண்டு பெருநகரத்தில் திரையிட அனுமதி இல்லை", என மேயர் பாலேந்திர ஷா தெரிவித்தார். இது குறித்த ஷாவின் முகநூல் பதிவிற்கு பரவலான ஆதரவும், ஒரு சிலரின் எதிர்ப்பும் காணப்படுகிறது. மேயரின் உத்தரவை நிறைவேற்றுவதாக கூறிய காத்மாண்டு பெருநகர காவல்துறை தலைவர் ராஜு பாண்டே, இதனை உறுதி செய்வதற்காக திரையரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதே போன்று "இன்று முதல் அத்திரைப்படம் திரையிட அனுமதியில்லை" என பொகாரா நபர மேயர் தனராஜ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகள் வலுவடைந்திருக்கும் நிலையில், படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா கூறுகையில், "திரைப்படத்தை உருவாக்கியவர்கள், பல வசனங்களில் மாற்றம் செய்வதாக தெரிவித்திருக்கிறார்கள். இவை ஒரு வார காலத்திற்குள் நடைபெற்று திரையரங்கங்களில் திரையிடப்படும்" என்றும் தெரிவித்தார்.
பிரபலமான டி-சீரிஸ் நிறுவனம், ரெட்ரோஃபைல்ஸ் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள "ஆதிபுருஷ்" திரைப்படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக இந்தி நடிகர் சாய்ஃப் அலிகானும், இலக்குவனாக சன்னி சிங்கும், மற்றும் அனுமனாக தேவதத்தா நாகேயும் நடித்துள்ளனர்.
- படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- ஒப்பந்தப்படி உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் 'மாமன்னன்' வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. படத்தின் டிரைலர் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். அத்துடன் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ஏஞ்சல் என்னும் திரைப்படம் 80 சதவீதம் முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள 20 சதவீத பட சூட்டிங்கிற்கு, ஒப்பந்தப்படி உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
- இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும் 'மாமன்னன்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் டிரைலர் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் யூடியூப்பில் முதலிடம் பிடித்து டிரெண்டிங்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
SOARING HIGH WITH 10 MILLION+ VIEWS ?⚡️#MaamannanTrailer continues to win hearts and trending on #Youtube - https://t.co/k4hX4ner2K@mari_selvaraj @Udhaystalin @RedGiantMovies_ @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction… pic.twitter.com/gzfoJ2CxFj
— Red Giant Movies (@RedGiantMovies_) June 19, 2023
- இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’.
- இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. சலார் படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் தலா ரூ. 10,000 அன்பளிப்பாக கொடுத்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சலார் படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்ட்தின் டீசர் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பாப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






