search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு வந்த புதிய சிக்கல்
    X

    பிரபாஸின் "ஆதிபுருஷ்" திரைப்படத்திற்கு வந்த புதிய சிக்கல்

    • பிரபாஸ், சயீப் அலிகான், கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் “ஆதிபுருஷ்”.
    • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் அதே சமயத்தில் எதிர்பார்ப்பும் தொடர்சியாக கிளம்பி வருகிறது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து வெளியான படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் அதே சமயத்தில் எதிர்பார்ப்பும் தொடர்சியாக கிளம்பி வருகிறது. இப்படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில் "ஆதிபுருஷ் படத்தில் ராமர், அனுமனை விடியோ கேம் கதாபாத்திரம் போல சித்தரித்தும் அவதூறு செய்யும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பது உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது. சனாதன தர்மத்தை அவமதிக்கு இந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதிபுருஷ் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


    Next Story
    ×