என் மலர்
சினிமா செய்திகள்
- சூர்யா தற்போது கங்குவா படத்திலும் கார்த்தி ஜப்பான் படத்திலும் நடித்து வருகின்றனர்.
- இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் ஒரே இடத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடிகர் கார்த்தி நடித்து வரும் ஜப்பான் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா மற்றும் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜப்பான் திரைப்படத்தை கூக்கு, ஜோக்கர், ஜிப்ஸி படத்தை இயக்கிய ராஜு முருகன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கல்யாணி பிரியதர்ஷன் தற்போது ஜோஷி இயக்கத்தில் ஆண்டனி என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன்–நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் 'ஹீரோ' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் 'புத்தம் புது காலை' வெப் தொடர் மற்றும் சிம்புவின் 'மாநாடு' படத்திலும் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கல்யாணி பிரியதர்ஷன், 'ஆண்டனி' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ஜோஷி இயக்குகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் கல்யாணி பிரியதர்ஷன் டூப் போடாமல் நடித்துள்ளார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
- இயக்குனர் பார்த்திபன் தற்போது புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார்.
- இப்படம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில், "மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். புதிய பாதை எத்தனை மொழிகளில் முறையான அனுமதியின்றி எடுக்கப் பட்டிருந்தாலும் மகிழ்ச்சி" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் "புதிய பாதை" படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும்" என்று கமெண்ட் செய்திருந்தார். இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், "தற்போது தயாராகிவரும் படம் (தலைப்பு-any guess?)முடிந்ததும் PP2 தயாராகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

1989-ஆம் ஆண்டு வெளியான "புதிய பாதை" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இந்த படத்தில் சீதா, மனோரமா, வி.கே.ராமசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பல மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
- இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். மேலும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ஜூன் 26ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி.
- இவர் தமிழில் பிக்பாஸ் 6-வது சீசனிலும் கலந்து கொண்டார்.
தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 6-வது சீசனிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போதுதான் இவர் கணவர் தினேஷிடம் இருந்து பிரிந்து வாழ்வது தெரிய வந்தது. பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது பல தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் தினேஷ் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், தான் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக தினேஷ் மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக கூறியுள்ளார். மேலும், தனது செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்தனர். போலீஸ் நிலையம் வந்த தினேஷ், ரக்ஷிதா வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம் என தெரிவித்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இருவரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர்.எக்ஸ்
- இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மனு ஆனந்த் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.

பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில் மிஸ்டர்.எக்ஸ் படத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மலையாள நடிகையான மஞ்சு வாரியர் இதற்குமுன்பு தமிழில் தனுஷுடன் அசூரன், அஜித்துடன் துணிவு படங்களில் நடித்திருந்தார். தற்போது ஆர்யாவுடன் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
- இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற "ஆழி மழைக்கண்ணா" வீடியோ பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற மாயா என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
A heart-wrenching melancholy.#Maayaa melodies tribute to #OomaiRavi
— Madras Talkies (@MadrasTalkies_) June 21, 2023
▶ https://t.co/NIx7fE5QLh
?:#VasudhaRavi #DeepthiSuresh #VinayaKrishnan
✍?: #JayantKaikini#PS2Blockbuster #CholasAreBack#PS2 #PonniyinSelvan2 @arrahman @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX… pic.twitter.com/Sd2e8TQkxI
- தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷ் மூன்றாவது முறையாக பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு முன்பு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷ்-ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவாகும் படம் காதல் கதையம்சம் கொண்ட படமாகவும் விமானப்படை பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் விமானப்படை பின்னணியில் நடிக்கவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’சந்திரமுகி 2’.
- விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு 'ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி..' என்ற தனது காமெடியை நடிகை ராதிகாவுடன் இணைந்து ரீ கிரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் சில பகுதிகள் சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்படுகின்றன. தேவையான இடங்களில் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பு நிறுவனம் அனுமதி பெற்று, ஜிஎஸ்டி உட்பட ரூ.1.24 கோடி கட்டணமாக விமான நிலைய நிர்வாகத்திடம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது.

அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றது. விமானம் புறப்படும் பகுதியில் மட்டுமே படமெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், படக்குழுவினர் விமான நிலையத்தின் மற்ற சில பகுதியில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் முறையான அனுமதி இல்லை எனக் கூறி படப்பிடிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டதாகவும் இதனால் நேற்று படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் இந்தியன் 2 படக்குழுவிடம் விமான நிலையத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட தகவல் குறித்த விளக்கம் கேட்டது. இதற்கு பதிலளித்த படக்குழு முறையான அனுமதியின்றி விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்று தெரிவித்தது. மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்தது.
- அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி.
- இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது "அநீதி" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. 'அநீதி' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், 'அநீதி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Super Nervous & Excited !
— Arjun Das (@iam_arjundas) June 20, 2023
Experience the raw and gripping world of #Aneethi ⛏️?
from July 2️⃣1️⃣st, 2023 in theatres ?
A @Vasantabalan1 film!#Spictures @shankarshanmugh@gvprakash @officialdushara @edwinsakaydop @arjunchdmbrm @UBoyzStudios @thinkmusicindia @vanithavijayku1… pic.twitter.com/lTOOU9HqaC
- காஜல் அகர்வால் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் பதிவிட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் பழனி, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கோஸ்டி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலின் பிறந்தநாளான நேற்று அவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், காஃபி கப்பில் அவர் எகிரி குதித்து குளிப்பது போன்று இடம்பெற்றிருக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






