என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விஜய்யுடன் அவர் இருக்கும் புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.
- விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு சரியாக இரவு 12 மணிக்கு வீடியோ வெளியீடு.
- விஜய்யை தத்ரூபமாக 3டி அனிமேஷனில் உருவாக்கி காட்சிகளை சினிமா காட்சிகளுக்கு ஈடாக தயாரித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது.
இதையடுத்து 'நா ரெடி' பாடலின் புரோமோ வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டு விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களால் ஆங்காங்கே கொண்டாட்டங்களும் கலைகட்டி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு சரியாக இரவு 12 மணிக்கு 3டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லியோ படத்தின் ப்ரோமோ காட்சியை மையமாக வைத்து இந்த 3 டி வீடியோவை உருவாக்கி இருக்கிறார் கிராபிக் டிசைனரான மேடி மாதவன் என்பவர்.
விஜய்யை தத்ரூபமாக 3டி அனிமேஷனில் உருவாக்கி காட்சிகளை சினிமா காட்சிகளுக்கு ஈடாக தயாரித்துள்ளார்.
இந்த வீடியோவை மேடி மாதவன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.. இது உங்களுக்காக" என்ற பதிவுடன் பகிர்ந்துள்ளார். ஃபேன் மேட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
LEO 3D Animated Video.
— Maddy Madhav (@MaddyMadhav_) June 21, 2023
Dear @actorvijay anna, this is for you?
#HBDThalapathyVIJAY #Leo @actorvijay@Jagadishbliss @7screenstudio@RamVJ2412 @GuRuThalaiva @OTFC_Off @VijayFansTrends pic.twitter.com/SzY1fUmdIg
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடல் நாளை வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது. இதையடுத்து 'நா ரெடி' பாடலின் புரோமோ வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டு விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து 'லியோ' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது இப்படத்தின் முதல்தோற்ற போஸ்டர் (ஃபர்ஸ்ட் லுக்) வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- மணிகண்டன் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘குட்நைட்’.
- இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கினார்.
'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் 'குட்நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கினார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்தனர். மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'குட்நைட்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குட்நைட் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'குட்நைட்' திரைப்படம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
- பாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் தீபிகா காகர்.
- இவர் இந்தி பிக்பாஸ் 12-வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.
பாலிவுட்டின் பிரபல தொலைக்காட்சி தொடர்களான 'சசுரால் சிமர்கா', 'பாலிகாவது' போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானவர் தீபிகா காகர். இவர் இந்தியில் சல்மான்கான் நடத்தி வந்த பிக்பாஸ் 12-வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். தீபிகா காகர் 2011-ஆம் ஆண்டு ரவுணக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2015-ஆம் ஆண்டு ரவுணக்கை விட்டு பிரிந்து விட்டார்.

இப்ராஹிம்- தீபிகா
அதன்பின், 'மூன்று முடிச்சு' என்ற தொலைக்காட்சி தொடரில் முதலில் தனக்கு கணவராக நடித்த ஷாயிப் இப்ராஹிம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இந்த குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளது.

இப்ராஹிம் பதிவு
இது குறித்து தீபிகா- இப்ராஹிம் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இன்று (ஜூன் 21) அதிகாலை எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை. எங்களுக்காக பிரார்த்தியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது.
- இவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த நிலையில், ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ராம் சரண்-உபாசனா
இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான ரோஜா, ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தாத்தாவானதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சிரஞ்சீவி காரு. இதயத்தில் என்றும் இளமையாகவும் எப்போதும் ஆற்றல் மிக்க இந்த குடும்பத்தில் ஒரு அழகான மெகா இளவரசி ஆசீர்வதிக்கப்படுவது எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம்.
அன்புள்ள ராம்சரண் நீ குழந்தையாக இருந்த போது உன்னை என் கைகளில் கட்டியணைத்த அந்த மறக்கமுடியாத நாட்களை நினைவு கூர்கிறேன், இப்போது உனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சியான செய்தியை கேட்பது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. சிரஞ்சீவி காரு தாத்தா பட்டம் பெற்றாலும் நீங்கள் எவர்கிரீன் ஹீரோ தான். உபாசனா மற்றும் குட்டி மகாலட்சுமிக்கு என்னுடைய ஆசிர்வாதங்கள்" என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
- நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் மிஸ்டர்.எக்ஸ்.
- இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.

மிஸ்டர் எக்ஸ் படக்குழு
பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தின் முதல் பாடலான ’நா ரெடி’ பாடல் நாளை வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளான நாளை (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது. இதையடுத்து 'நா ரெடி' பாடலின் புரோமோ வீடியோவை நேற்று வெளியிட்டு விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகர் விஜய் சமீபத்தில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார்.
- இந்த நிகழ்ச்சியானது விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், மாணவ-மாணவிகள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியானது விஜய் அரசியல் வருகையின் முன்னோட்டம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது:- பொது வாழ்க்கைக்கு வரக் கூடியவர்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக சினிமாவில் இருக்கும் அனைவரும் சினிமா புகழ் இருந்தால் போதும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு இருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் திரையுலகினர் அவர்களுடைய வேலையை மட்டுமே செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமாவில் இருப்பவர்கள் எல்லா வேலையும் முடிந்து மார்கெட் போனதும் அரசியலுக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து எளிய முறையில் மக்களை கவர்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அந்த மாதிரியான எண்ணத்தோடு இல்லாமல், தொண்டு உள்ளத்தோடு விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். மக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். ஒரு முற்போக்கு கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். இது தான் இன்று தமிழ்நாட்டில் தேவையான ஒன்றாக இருக்கிறது என்று கூறினார்.
- நடிகர் மகேஷ்பாபு தற்போது ‘குண்டுர் காரம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தை இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தற்போது 'குண்டுர் காரம்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'குண்டுர் காரம்' திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்திலிருந்து நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பூஜா ஹெக்டேவிற்கு போதிய கால்சீட் இல்லாததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் 'வாத்தி' பட நடிகை சம்யுக்தா இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பூஜா ஹெக்டே- சம்யுக்தா
சமீபத்தில் 'குண்டுர் காரம்' திரைப்படத்தில் இருந்து தமன் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
- தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஜே.டி.சக்ரவர்த்தி.
- இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழில் கண்ணத்தில் முத்தமிட்டால், கச்சேரி ஆரம்பம், அரிமா நம்பி, காரி போன்ற பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் ஜே.டி.சக்ரவர்த்தி. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னை விஷம் கொடுத்து கொல்ல சதி நடந்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

ஜே.டி.சக்ரவர்த்தி
இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனக்கு சில மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனக்கு மது, சிகரெட், போதைப்பொருள் கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. ஆனாலும் மூச்சுவிடவே சிரமப்பட்டேன். இந்தியா, இலங்கையில் சிகிச்சை எடுத்தும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகிவிட்டது. இனி பிழைப்பது கஷ்டம் என்று மருத்துவர்கள் கைவிட்டனர். அப்போது நாகார்ஜுனா என்ற மருத்துவர் எனக்கு ஏன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பதை கண்டுபிடித்தார். எனக்கு தெரிந்த ஒருவர் 8 மாதங்களாக எனக்கு ஒரு கசாயம் கொடுத்து வந்தார். அதில் விஷம் கலந்து கொடுத்து இருப்பதை அந்த மருத்துவர் கண்டுபிடித்தார்'' என்றார்.
- நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.

தேரே இஸ்க் மேன் போஸ்டர்
கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

தனுஷ் பதிவு
இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், "ராஞ்சனாவின் பத்து வருடங்கள், சில திரைப்படங்கள் நம் வாழ்க்கை முழுவதையும் மாற்றிவிடும். ராஞ்சனாவை கிளாசிக்காக மாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். தற்போது ஒரு தசாப்தத்திற்கு பிறகு ராஞ்சனாவின் உலகில் இருந்து ஒரு கதை, "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein). எதுமாதிரியான பயணம் எனக்காக காத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், இது ஒரு சாகசமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கும் எங்களுக்கும் " என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், "தேரே இஸ்க் மேன்" திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.






