பூஜையுடன் தொடங்கியது ஆர்யா- கவுதம் கார்த்திக் பட ஷூட்டிங்

நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் மிஸ்டர்.எக்ஸ்.இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பூஜையுடன் தொடங்கியது ஆர்யா- கவுதம் கார்த்திக் பட ஷூட்டிங்
Published on

விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.

மிஸ்டர் எக்ஸ் படக்குழு

பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com