என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தருணம்'.
    • இந்த படத்தில் கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    'தேஜாவு' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். மேலும், ராஜ் ஐயப்பன், பால சரவணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தருணம்' திரைப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியன் -2 படப்பிடிப்பு சென்னை விமானநிலையத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையம் ஆணையத்திடம் படக்குழு ரூ.1.24 கோடி கட்டணமாக செலுத்தி முன் அனுமதி பெற்றுள்ளது.


    கடந்த மூன்று நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், இன்று நான்காவது நாளாக 500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்களை கொண்டு விமான தாக்குதலில் இருந்து தப்பித்து செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • நடிகை தமன்னா 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இவர் நடிப்பில் 'ஜி கர்தா' வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.


    இவர் நடித்துள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' தொடர் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரில் தமன்னா கவர்ச்சியாக நடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இதை பலரும் விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'ஜி கர்தா' வெப் தொடரிலும் தமன்னா அளவிற்கு மிஞ்சிய ஆபாச காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.

    இந்த காட்சிகள் குறித்து பலர் ட்ரோல் செய்து வந்த நிலையில், இது குறித்து தமன்னா விளக்கமளித்துள்ளார். அதில், "கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கமான காட்சிகளில் நடித்தேன். ஜி கர்தா வெப் தொடர் பள்ளி பருவத்து காதல் கதை. எனவே அந்த கதைக்கு நெருக்கமான காட்சிகள் தேவை என்பதால் நடித்தேன்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்து வருபவர் ஸ்ரேயா ரெட்டி.
    • இவர் தற்போது ‘சலார்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கடந்த 2002-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமுராய்' படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. இதைத்தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான 'திமிரு' படத்தில் இவர் நடித்திருந்த வில்லி கதாபாத்திரம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.


    தொடர்ந்து, வெயில், காஞ்சிவரம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த 2008-ம் ஆண்டு விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் விஷாலின் தோரணை, வெடி உள்ளிட்ட படங்களையும் ஸ்ரேயா ரெட்டி தயாரித்துள்ளார்.

    இவர் தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் 'சலார்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயங்களை ஸ்ரேயா ரெட்டி பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.


    ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர்.


    ஆதிபுருஷ் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ.410 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




    • நடிகர் விஜய் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது மாணவர்களிடையே பேசிய நடிகர் விஜய், எதிர்கால வாக்காளர்களாகிய நீங்கள் ஓட்டுப்போட பணம் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

    அவருடைய அரசியல் வருகை குறித்து மன்ற நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவித்து அதற்கான பணியில் இறங்கியுள்ளனர். நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு தமிழகத்தின் பல்வேறு நடிகர்களும், அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், தலைமைச் செயலகத்தில் நடிகர் விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்பது போலவும், முதல் நாள் முதல் கையெழுத்தாக மது விலக்கை வலியுறுத்தி அவர் கையெழுத்திடுவது போலவும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.


    ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

    அவரது இருக்கைக்கு மேலே அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோர் புகைப்படங்களும் இருக்கையின் அருகே அப்துல்கலாம், அண்ணா ஆகியோரது புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இதே போல் மேலும் சில ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் மக்கள் இயக்க முதல்வரே, வருங்கால தமிழகமே என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    இது குறித்து அவரது ரசிகர்கள் தெரிவிக்கையில், நடிகர் விஜய் தனது அரசியல் வருகையை வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ அவர் கண் அசைவுக்காக தொண்டர்கள், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கிடக்கிறோம் என்றனர்.

    இது மட்டுமின்றி நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் அன்னதானம், ரத்ததானம், வழங்கியதோடு மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இது மட்டுமின்றி மும்மதக் கோவில்களில் சிறப்பு வழிபாடும் செய்தனர்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'.
    • விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 'லியோ' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.




    இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது. இதையடுத்து 'நா ரெடி' பாடலின் புரோமோ வீடியோவை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். 'லியோ' படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்தநாளில் சரியாக 12 மணிக்கு லோகேஷ் வெளியிட்டார்.



    இந்நிலையில் "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்சியாக அப்டேட்டுகள் வருவதால் ரசிகர்கள் உற்சாத்தில் உள்ளனர்.



    • தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் ப்ரீத் சிங்.
    • இவர் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ், சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.



    இந்நிலையில் காதல் குறித்த கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, காதல் அளவற்ற ஒன்று, அதை உங்களால் விவரிக்க முடியாது. நீங்கள் காதலிக்கும் நபருடன் இருக்கும்போது, நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். காதல் என்பது ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கக் கூடிய ஒன்று, இது ஒரு தோழமை, இருவரும் ஒருவருக்கொருவர் உதவி இருவரின் கனவுகளையும் எட்ட வேண்டும் என்று கூறினார்.

    • நடிகர் துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.



    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பத்து தல'.
    • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

    ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'பத்து தல'. நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலானது.

    இந்நிலையில் 'பத்து தல' படத்தில் இடம்பெற்ற ராவடி பாடலை ரசிகர்கள் ஜாலியாக ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடகர் சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகனுடன் ரீ-க்ரியேட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரியமுடன், கில்லி, பிகில், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய், தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில் நடிகரும், விஜய்யின் உறவினருமான விக்ராந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விஜய்யின் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.



    ×