இரண்டாவது போஸ்டர்: "லியோ" பாடல் வெளியாகும் நேரத்தை அறிவித்த லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'.விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 'லியோ' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இரண்டாவது போஸ்டர்: "லியோ" பாடல் வெளியாகும் நேரத்தை அறிவித்த லோகேஷ்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது. இதையடுத்து 'நா ரெடி' பாடலின் புரோமோ வீடியோவை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். 'லியோ' படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்தநாளில் சரியாக 12 மணிக்கு லோகேஷ் வெளியிட்டார்.

இந்நிலையில் "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்சியாக அப்டேட்டுகள் வருவதால் ரசிகர்கள் உற்சாத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com