புதிய போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான் படக்குழு

நடிகர் துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
புதிய போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான் படக்குழு
Published on

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com