என் மலர்
சினிமா செய்திகள்

நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: பிரபலங்கள் வாழ்த்து - லைவ் அப்டேட்ஸ்
- விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Live Updates
- 22 Jun 2023 4:02 PM IST
நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக திருப்பூரில் தாராபுரம் ,மடத்துக்குளம் தொகுதிகளில் உள்ள கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள், நோட்டு புத்தகங்கள், ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு, அன்னதானம், பால்வாடி பள்ளிகளுக்கு நாற்காலிகள் வழங்கப்பட்டது.
- 22 Jun 2023 3:56 PM IST
காதல் கண் கட்டுதே, ஏமாளி, கீ, சுட்டு பிடிக்க உத்தரவு, முருங்ககாய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அதுல்யா ரவி, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
- 22 Jun 2023 3:34 PM IST
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 22 Jun 2023 3:31 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்த நடிகை சனம் ஷெட்டி, விஜய்யின் புகைப்படத்தை வரைந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Small gift with big love to our lovable Thalapathy 🌟
— Sanam Shetty (@ungalsanam) June 22, 2023
Have a bloody sweet Birthday @actorvijay sir 🎂 #HBDThalapathy #Vijay #mynewsketch #samstrokes#LeoFirstLook #LeoSecondLook #ThalapathyBirthday pic.twitter.com/cu3cZKYP5Q - 22 Jun 2023 3:12 PM IST
விஜய்யின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், மக்கள் இயக்க கொடியேற்றுதல், மக்கள் இயக்க பெயர் பலகை திறப்பு, மரம் நடுதல், கோவில்களில் சிறப்பு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து முதியோர் இல்லங்களில் அன்னதானம் உள்ளிட்ட வையும் நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்ட மன்ற தொகுதிகளிலும் நடைபெற்றது.
- 22 Jun 2023 2:46 PM IST
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு, ஏழை மக்களுக்கு அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- 22 Jun 2023 2:43 PM IST
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு
- 22 Jun 2023 1:47 PM IST
கோவையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பிறந்த நாளையொட்டி இன்று காலை கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதனைதொடர்ந்து 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர். பின்னர் கோனியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெற்றது. மேலும் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.






