என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார்.
- மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்திலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எஸ்கே21' படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'எஸ்கே22' படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 'எஸ்கே22' படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் 'சீதா ராமம்' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
- மணிமாறன் என்பவர் தனது 16 வயது முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
- இவர் உலக சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவையும் பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37). தனது 16 வயது முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் செய்து வரும் சமூக சேவை கடினமானது. ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மரணமடைந்து விட்டால் அவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று பலநாட்கள் இருக்கும்.
அதனை பெற எவரும் முன் வரமாட்டார்கள். அவ்வாறு பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கும் உடல்களை போலீசார் அனுமதியுடன் பெற்று நல்லடக்கம் செய்து வருகிறார். கடந்த 21 ஆண்டுகளாக தொய்வின்றி இந்த பணியை அர்ப்பணிப்பு மனதுடன் செய்து வருகிறார். இதுவரை 2,045 ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். இவரது சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கியுள்ளன.
பல மாநில முதல்-அமைச்சர்களின் பாராட்டுபெற்ற அவர் உலக சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவையும் பெற்றுள்ளார். அவரை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்தி உள்ளனர். கொரோனா காலங்களிலும் மணிமாறன் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்து வந்தார்.மேலும் தொழு நோயாளிகளுக்கு மனமுவந்து சேவையாற்றி வந்தார்.

இதுபற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த், மணிமாறன் சேவையை மனதார பாராட்டி அவர் தடையின்றி சேவை செய்யும் வகையில் தனது அறக்கட்டளை சார்பில் ஒரு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். மணிமாறன் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய ஊக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய ஆம்புலன்ஸ் பெற்று கொண்ட மணிமாறன் கூறியதாவது:-
நான் 21 ஆண்டுகளாக ஆதரவற்றவர்களின் உடலை அடக்கம் செய்து வருகிறேன் உடல்களைக் கொண்டு செல்வதற்காக வாடகை வேன்களை பயன்படுத்தி வந்தேன். இந்த நிலையில் எனது சேவை பற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த் என்னை சந்திக்க விரும்புவதாக அவரது உதவியாளர் போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதனையடுத்து நேற்று காலை என்னை தயாராக இருக்கும்படி கூறினர்.
நான் திருவண்ணாமலையில் அவர்களுக்காக காத்திருந்தேன் காலையில் ரஜினிகாந்த் வீட்டிலிருந்து அவரது உதவியாளர் காரில் திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கிருந்து என்னை சென்னையில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் அங்கு சென்றதும் முதலில் எனக்கு உணவு வழங்கினார்கள்.
ரஜினியிடம் 20 நிமிடம் சந்தித்து பேசினேன்.அப்போது அவர் எனது சேவையை பாராட்டினார். மேலும் எனக்கு ஆம்புலன்ஸ் வழங்கினார். எப்படி இவ்வளவு காலம் இந்த பணியில் ஈடுபட முடிகிறது என கேட்டறிந்தார். மேலும் குடும்ப வாழ்க்கை மிகவும் அவசியம். இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள். நான் முடிந்த அளவு செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். அவரிடம் நான் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்.
ரஜினிகாந்த் ஆம்புலன்ஸ் வழங்கியது என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அவரது இந்த உதவி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. ரஜினிகாந்த் வழங்கிய ஆம்புலன்ஸ் மூலம் ஆதரவற்றவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியும். மேலும் முதியவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் விஜய் நேற்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
- இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரியமுடன், கில்லி, பிகில், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய், நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்தனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படப்பிடிப்பு தளத்தில் விஜய் குழந்தைகளுடன் 'புட்ட பொம்மா' பாடலுக்கு கியூட்டாக நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- ஹரிஷ் கல்யாண் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ’பார்க்கிங்’ படத்தில் நடிக்கிறார்.
- இதில் இவருக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார்.
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு 'பலூன்' படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது. இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
- மாமன்னன் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- மாமன்னன் படத்தை தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் 'மாமன்னன்' வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உதயநிதி நாயகனாக நடிக்க நடிகைகள் ஆனந்தி, பாயல் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் "ஏஞ்சல்" என்ற படத்தை தயாரித்து வருவதாகவும், 2018ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்திருக்கிறார்.
இதனை தனது கடைசி படம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனால் "ஏஞ்சல்" படத்தை முடிக்காமல் "மாமன்னன்" படத்தை வெளியிட அனுமதித்தால் அது தங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தரவேண்டும் என்றும் ரூ.25 கோடி இழப்பீடி தரவேண்டும் என்றும், அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதற்குள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
- “ஆல் இன் ஆல் அழகு ராஜா” படத்தில் கார்த்தி, காஜல், பிரபு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
- இப்படத்தில் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றை கார்த்தி பதிவிட்டிருந்தார்.
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் "ஆல் இன் ஆல் அழகு ராஜா". இப்படத்தில் கார்த்தி, காஜல், பிரபு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற காமெடி புகைப்படம் ஒன்றை நடிகர் கார்த்தி பகிர்ந்து "வாடி என் கரீனா சோப்ரா" என்று ஜாலியாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு நடிகர் சந்தானம் வந்துட்டேன் வந்தியதேவன் மாமா என்று கார்த்தியை ஜாலியாக கலாய்த்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் கவின் நேற்று தனது பிறந்தநாளை கொண்டினார். இவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
- நா ரெடி பாடல் ஒரு மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
- போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இதற்கிடையே, 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான நேற்று சரியாக 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான "ஆல்டர் ஈகோ நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியானது.
இந்நிலையில், இப்பாடல் வெளியான சில நிமிடங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
இது, மாஸ்டர் படத்தின் வாதி கம்மிங் பாடல் ரிலீசான சில நிமிடங்களில் இருந்த பார்வையாளர்களைவிட, "நா ரெடி" பாடலின் பார்வையாளர்கள் அதிகம்.
மேலும், நா ரெடி பாடல் ஒரு மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
தொடர்ந்து, 10 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இதனை சோனி மியூசிக் சவுத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- நடிகர் விஜய் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரியமுடன், கில்லி, பிகில், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய், தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்தனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திரிஷா பகிர்ந்த புகைப்படம்
இந்நிலையில், நடிகை திரிஷா, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது சமூக வலைதளத்தில் 'லியோ' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
- ’லியோ’ படத்தின் முதல் பாடலான ”அல்டர் ஈகோ நா ரெடி" பாடலை விஜய் பாடியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 'லியோ' படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான இன்று சரியாக 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியானது.

லியோ போஸ்டர்
இந்நிலையில், இப்பாடல் வெளியான ஒரு மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியாக வலம் வருபவர் ரிஹானா.
- இவர் தற்போது தன் காதலன் ராக்கி என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியாக வலம் வருபவர் ரிஹானா. இவர் பாடகியாக மட்டுமல்லாமல் நடிகை, பேஷன் டிசைனர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். இவர் குட் கியாள் கோன் பேட், ரேட்டட் ஆர், லவுட், டால்க் தேட் டால்க் போன்ற பல ஆல்பம் பாடல்கள் பாடி புகழ் பெற்றார். "Umbrella" என்ற இசை ஆல்பம் மூலம் இவர் முதல் கிராமி விருதை பெற்றார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு கிறிஸ் பிரவுன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரிஹானா கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2013-ஆம் ஆண்டு பிரிந்தார். பின்னர் ஹசன் ஜமீலுடன் வாழ்ந்து வந்த ரிஹானா அவரையும் விவாகரத்து செய்தார். இதையடுத்து ராக்கி என்பவரை காதலித்து வந்த ரிஹானா 2020-ஆம் ஆண்டு முதல் அவருடன் லிவ்விங் டூ கெதர் ரிலேஷன் ஷிப்பில் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில், பாடகி ரிஹானா பாரிசில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கழுத்தில் கைக்கடிகாரம் போன்று இருக்கும் வைர நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். 30 கேரட் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த நெக்லஸ் இந்திய மதிப்பின் படி ரூ. 5.7 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ரிஹானாவின் நெக்லஸ் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாக உள்ளது.
- விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
- ’லியோ’ படத்தின் முதல் பாடலான ”அல்டர் ஈகோ நா ரெடி" பாடலை விஜய் பாடியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 'லியோ' படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான இன்று சரியாக 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இப்பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் குரலில் மிகவும் பெப்பியாக உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.






