எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா.. கவனம் ஈர்க்கும் லியோ பாடல்

விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.’லியோ’ படத்தின் முதல் பாடலான ”அல்டர் ஈகோ நா ரெடி" பாடலை விஜய் பாடியுள்ளார்.
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா.. கவனம் ஈர்க்கும் லியோ பாடல்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 'லியோ' படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான இன்று சரியாக 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இப்பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் குரலில் மிகவும் பெப்பியாக உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com