குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை.. நடிகர் பகிர்ந்த பதிவு

பாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் தீபிகா காகர்.இவர் இந்தி பிக்பாஸ் 12-வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.
இப்ராஹிம்- தீபிகா
இப்ராஹிம்- தீபிகா
Published on

பாலிவுட்டின் பிரபல தொலைக்காட்சி தொடர்களான 'சசுரால் சிமர்கா', 'பாலிகாவது' போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானவர் தீபிகா காகர். இவர் இந்தியில் சல்மான்கான் நடத்தி வந்த பிக்பாஸ் 12-வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். தீபிகா காகர் 2011-ஆம் ஆண்டு ரவுணக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2015-ஆம் ஆண்டு ரவுணக்கை விட்டு பிரிந்து விட்டார்.

இப்ராஹிம்- தீபிகா

அதன்பின், 'மூன்று முடிச்சு' என்ற தொலைக்காட்சி தொடரில் முதலில் தனக்கு கணவராக நடித்த ஷாயிப் இப்ராஹிம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இந்த குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளது.

இப்ராஹிம் பதிவு

இது குறித்து தீபிகா- இப்ராஹிம் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இன்று (ஜூன் 21) அதிகாலை எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை. எங்களுக்காக பிரார்த்தியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com