உரிமையை மீட்டெடுக்க வரும் சுந்தர் சி.. தலைநகரம்- 2 அப்டேட்

இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைநகரம்-2’.இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
சுந்தர் சி
சுந்தர் சி
Published on

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சுந்தர் சி. இவர் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தலைநகரம்-2' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. மேலும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

தலைநகரம் 2 போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தலைநகரம்-2' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com