மீண்டும் வெளியாகும் 'பிச்சைக்காரன் 2' திரைப்படம்

விஜய் ஆண்டனி இயக்கி நடித்த திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’.இப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
பிச்சைக்காரன் 2
பிச்சைக்காரன் 2
Published on

விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், இப்படத்தின் வெற்றி விழா விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது.

பிச்சைக்காரன் 2 போஸ்டர்

இந்நிலையில், 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் வருகிற 18-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com