என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்

வினோதினி வைத்தியநாதன்
கட்சியின் கொள்கை குறித்து பேசிய நபருக்கு கூலாக பதிலளித்த நடிகை வினோதினி வைத்தியநாதன்

- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்து கவனம் பெற்றவர் வினோதினி வைத்தியநாதன்.
- இவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பிய நபருக்கு பதிலளித்துள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்ததன் மூலம் பிரலபமடைந்தவர் வினோதினி வைத்தியநாதன். அதன்பின்னர் 'கடல்', ஜிகிர்தண்டா', 'ஓ.கே. கண்மணி', 'அப்பா', 'சூரரைப் போற்று', 'கோமாளி', உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்து கவனம் பெற்றார்.
கமல் - வினோதினி வைத்தியநாதன்
வினோதினி வைத்தியநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும், வீடியோக்களையும் தொடர்சியாக பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
வினோதினி வைத்தியநாதன்
இந்நிலையில் வினோதினி வைத்தியநாதன் சமூக வலைத்தளத்தில் கட்சியின் கொள்கை குறித்து பதிவிட்ட நபருக்கு கூலாக பதிலளித்துள்ளார். அதாவது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த வினோதினியிடம் நீங்களாவது கட்சியோட கொள்கை என்ன னு தெரிஞ்சுக்குவீங்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த வினோதினி, ஓ தாராளமா. முதல் கொள்கை - மதக்குறியீடுள்ள ஃபோட்டோவை DPயாக வைக்காமலிருத்தல் என்று பதிலளித்தார்.