நடந்தா நல்லா இருக்கும்.. லியோ படத்திற்கு விக்ரம் பட நடிகர் கொடுத்த ரியாக்ஷன்

நடிகர் விஜய் தற்போது ’லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹரிஷ் உத்தமன்- விஜய்
ஹரிஷ் உத்தமன்- விஜய்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹரிஷ் உத்தமன் பதிவு

இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் 'லியோ' திரைப்படத்தையும் 'விக்ரம்' திரைப்படத்தையும் இணைக்கும் வகையில் மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஹரிஷ் உத்தமன் 'நல்லா இருக்கும் இல்லையா' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com