என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காதலர் தினத்தை ஒட்டி வரும் பிப்ரவரி 13 அன்று வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'.
த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

- 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.
- 'தாய் கிழவி' பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இதனை தொடர்ந்து 'தாய் கிழவி' பிப்ரவரி 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது. 'தாய் கிழவி' படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓ.டி.டி. தளம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 'தாய் கிழவி' படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.
இந்நிலையில், தாய் கிழவி படத்தின் "தாய் கிழவி வாரா.." பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.
- ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார்.
நடிகர் ஜீவாவின் 45ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவான 'தலைவர் தம்பி தலைமையில்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வருகிற 7ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிமி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கில் "தலைவர் தம்பி தலைமையில்" படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு வேட்டி-சட்டை மற்றும் பட்டுப்புடவை பரிசாக வழங்கப்படும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து படத்தை தயாரித்த "கண்ணன் ரவி க்ரூப்ஸ்" தனது அதிகாரப்பூர்வ X தளப்பதிவில், "25வது நாள் சிறப்பு, TTT படக்குழு, கிடைத்திருக்கும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. எங்கள் மனமார்ந்த நன்றியின் அடையாளமாக, பிப்ரவரி 7ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள ரோகிணி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கில் எந்தக் காட்சியில் படம் பார்க்கும் அனைவருக்கும், ஆண்களுக்கு வேட்டி-சட்டை மற்றும் பெண்களுக்கு பட்டுப் புடவை பரிசளிக்கப்படும்.," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் தம்பி தலைமையில் படம் வெளியான 25வது நாளை கொண்டாடும் வகையில், படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட வெற்றியை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு புத்தாடை வழங்கும் படத்தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்புக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்தியில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் 'கூஸ்கோர் பண்டட்' (Ghooskhor Pandat) என்ற படம் உருவாகி உள்ளது.
நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டதும் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கூஸ்கோர் என்றால் லஞ்சம் வாங்குபவர், பண்டட் என்பது பிரமாணரை குறிக்கும் சொல். எனவே படத்தின் தலைப்பு சர்ச்சையில் சிக்கி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசுதோஷ் துபே, நெட்பிளிக்ஸ் நிறுவனதிற்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இந்தப் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
லஞ்சம் என்பது தனிநபர் சார்ந்த குற்றம் என்றும், அதை ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் இணைப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயரைக் குலைப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
- அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
- அவரது அரசியல் பயணத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள்.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் "அரசன்" படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன் மூன்று கெட்டப்களில் நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் சமீபத்திய பேட்டியில் ஜனநாயகன் ரிலீஸ் மற்றும் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது பேசிய சிலம்பரசன், "விஜய் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். ஜனநாயகன் என்பது அவரது கடைசிப் படம். அந்தப் படம் வெளியாக வேண்டும், அதனால்தான் நான் ட்வீட் செய்தேன். எனக்கு அரசியல் தெரியாது, அதைப் பற்றிப் பேச நான் சரியான ஆளும் அல்ல. அவரது அரசியல் பயணத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள்," என்றார்.
முன்னதாக ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கு நடைபெற்ற சமயத்தில் நடிகர் சிலம்பரசன் விஜய்-க்கு ஆதரவாக X தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரவி மோகனுக்கு ஜோடியாக தவ்தி ஜிவால் நடித்துள்ளார்.
- 'கராத்தே பாபு' படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரவி மோகனின் 34-வது படம் 'கராத்தே பாபு'. 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ள இப்படத்தை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், சக்தி வாசுதேவன், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜ ராணி பாண்டியன், சந்தீப் ராஜ், சிந்துப்ரியா, அஜித் கோஷ், அரவிந்த், கல்கி ராஜா, ஸ்ரீ தன்யா, ஆனந்தி, சாம் ஆண்டர்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான 'கராத்தே பாபு' படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வரும் கோடைக்காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
- அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பொது அறிவிப்பு.
தமிழ் திரையுலகில் டப்பிங் மற்றும் நடிப்பு என பன்முகத்தன்மை கொண்டவர் ரவீனா. சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படங்களில் ரவீனா தனது நடிப்பு மற்றும் பின்னணி குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ரவீனா தான் சந்தித்து வரும் பிரச்சனை குறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
"கடந்த நான்கு ஆண்டுகளாக என்னை, எனது குடும்பத்தினரை மற்றும் நண்பர்களை தொடர்ந்து தொந்தரவு செய்து வரும் ஒரு நபர் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பொது அறிவிப்பு இது.
இந்த தொந்தரவு தொடர்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக அமைதியாக இருந்து காவல் துறையில் புகார் அளித்து, எச்சரிக்கைகள் வழங்கப்பட்டாலும், "சபரிஷ்" என்ற நபரும் அவரது இரட்டையர் சகோதரரும் தொடர்ந்து என்னை மட்டுமின்றி, எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை ஆன்லைனில் துன்புறுத்தி வருகிறார்.
அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் மற்றும் கருத்துகளில் மிகவும் அருவருப்பான, அவதூறான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தாக்குதல் என்னை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கிறது.
"என் காரணமாக என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்,"
சட்டபூர்வமான வழிகளின் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்ற போதிலும், இந்த தொந்தரவு இன்னும் நிறுத்தப்படவில்லை. அந்த நபர் பல்வேறு சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தி, என்னை மட்டுமின்றி பிற பெண் நடிகைகள் மற்றும் தொழில்முறை கலைஞர்களையும் தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார்.
மேலும், "ஏற்கனவே சந்தித்தோம்", "திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது" போன்ற கற்பனைக் கதைகளை உருவாக்கி, பெண்களை மனதளவில் அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறார்.
இந்த நிலையில், இனி மௌனம் காக்க முடியாது என்பதால், இந்த பிரச்சினையை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பொதுமக்கள் பின்வரும் நடவடிக்கைகளை செய்ய வேண்டுகிறேன்:
* அந்த நபரின் மற்றும் அவரது சகோதரரின் சமூக வலைதள கணக்குகளை **Block** செய்து **Report** செய்ய வேண்டும்.
* அவர்களிடமிருந்து எந்தவிதமான தகவல்கள் அல்லது செய்திகள் வந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* அவர்களின் கருத்துகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.
"பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை அழைக்கப்படுகிறது. அனைவருக்கும் இந்த நகரம் உண்மையில் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்படிப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவை நடிகை ரவீனா முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை காவல் துறை, சைபர் பிரிவு மற்றும் இதர அமைப்புகளை டேக் செய்துள்ளார்.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலானது.
- சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரியில் வெளியான படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார். பேசில் ஜோசப், ராணா டக்குபதி, சேத்தன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மொழி திணிப்பை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கும் மேல் வசூலானது. இந்நிலையில் பராசக்தி படம் வரும் பிப்.7ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகார்திகேயன் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரது 2 மகன்களுக்கும் மொட்டை போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்கியுள்ளார்.
- விஜய் ஆண்டனியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.
2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள `புடிக்கலே புடிக்கலே' பாடல் தற்போது வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் ஆவார்.
காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், படம் நாளை (பிப். 6) வெளியாக இருக்கிறது. மேலும், இந்தப் படத்தின் விசேஷ பிரீமியர் காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்த காட்சியில் படத்தை பார்த்தவர்கள் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் "வித் லவ்" திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- படத்தில் 'டி-ஏஜிங்' பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
- லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் "கூலி". பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே வந்தது. எனினும், கடந்த ஆண்டு தமிழ் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் கூலி இரண்டாவது இடம் பிடித்தது.
இந்த நிலையில் கூலி படம் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளரும், நடிகர் ரஜினியின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் மனம்திறந்து பதிலளித்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகி இருக்கும் "வித் லவ்" திரைப்படம் நாளை (பிப். 6) வெளியாக இருக்கிறது. இதையொட்டி தனியார் செய்தியாளருக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் "கூலி" படம் பற்றி பேசியுள்ளார்.
உங்களுக்கு கூலி படம் பிடித்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், "படத்தின் கடைசி 10 நிமிடங்கள் அதாவது 'டி-ஏஜிங்' பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தலைவர் ரஜினிகாந்தின் ரசிகன் என்ற முறையில், அவரை இன்னும் அதிகமாக பார்க்க விரும்பினேன். எனக்குப் படம் பிடித்திருந்தது, ஆனால் இது அப்பாவின் மிகவும் பிடித்த படங்களின் பட்டியலில் இல்லை."
"என் கருத்துப்படி, இப்போதெல்லாம் மக்கள் அதிகப்படியான வன்முறையை விரும்புவதில்லை என நினைக்கிறேன். 'கூலி' படம் பற்றி நான் மேலும் விரிவாக பேச விரும்பவில்லை, ஏனென்றால் பல நல்ல படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு," என்றார்.
- நான் வரலாமா என்று அவரிடம் கேட்டேன்.
- அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை.
நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் "அரசன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக நடிகர் சிலம்பரசன் துபாயில் வைத்து நடிகர் அஜித் குமாரை சந்தித்து இருந்தார். சிலம்பரசன் - அஜித் குமார் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் சிலம்பரசன் துபாயில் வைத்து நடிகர் அஜித் குமாரை சந்தித்தது பற்றி மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேசிய சிலம்பரசன், "நான் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்காக துபாய் சென்றிருந்தேன். அஜித் குமாரின் பந்தயப் பயிற்சி செய்யும் இடம் வழியிலேயே இருந்தது. நான் அவரை நீண்ட நாட்களாக சந்திக்க திட்டமிட்டிருந்தேன், இப்போது சரியான வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில், பந்தயத்தின் போது அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. அதனால், நான் வரலாமா என்று அவரிடம் கேட்டேன். AK வரச் சம்மதித்து என்னை சந்தித்தார். என்னை சந்தித்த பிறகு AK மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும் தனது பந்தயம் குறித்து மிக விரிவாக பகிர்ந்துகொண்டார். நானும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்," என தெரிவித்தார்.






