என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மலையாள சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படுபவர்.
    • 47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக படங்கள் நடித்து வருகிறார்.

    மலையாள சினிமா கொண்டாடும் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். மோகன்லால், மம்முட்டி என முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்த இவர் தமிழில் 'அசுரன்', 'துணிவு', 'விடுதலை-2', 'வேட்டையன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    மலையாள சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர், 47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக படங்கள் நடித்து வருகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார்.

    இந்தநிலையில் 'இப்போதும் அதே ஸ்டைல் மற்றும் இளமையுடன் நீங்கள் வலம் வருகிறீர்களே... அதன் ரகசியம் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு, ''உடற்பயிற்சி மற்றும் நடனம் தான் காரணம். சரியான உணவு முறைகளும் என்னை பாதுகாப்பதாக உணருகிறேன்'' என்று சிரித்தபடி கூறுகிறார்.

    மஞ்சு வாரியர் தினமும் தவறாமல் 'ஜிம்'முக்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

    • திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
    • சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன.

    கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.

    அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

    மேலும் திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன.

    இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அத்துடன் சிறந்த நடிப்புக்கான விருதுகளும் பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்த விழாவை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.

    • இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • பர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா பாடலும் அண்மையில் வெளியானது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா பாடலும் அண்மையில் வெளியானது.

    இந்நிலையில் 'ரெட்ட தல' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  

    அகண்டா தாண்டவம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமன் இசையமைத்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர்.

    கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அகண்டா-2 தாண்டவம் படத்தின் டீசர் கடந்த 25ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முதல் பாடலான "அகண்டா தாண்டவம்" வருகிறது 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இன்று இப்பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    தமன் இசையமைக்க கல்யாணசக்ரவர்த்தி, திரிபுரனேனி ஆகியோர் பாடலை எழுதியுள்ளனர். சங்கர்மகாதேவன், கைலாஷ் கெர் பாடியுள்ளனர்.

    சத்திய ஜோதி பிலிம்ஸ் தலைவன் தலைவி வெற்றி படத்தை கொடுத்த நிறுவனம் ஆகும்.

    விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

    மிகப்பெரிய வெற்றி படத்திற்குப் பிறகு சிவாஜி கணேசன் பேரன் தர்சன் கணேசனை வைத்து புதுப்படம் தயாரிப்பதாக அறிவித்திருந்தது. இப்படத்தில் கங்கை அமரன், ரோஜா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தை புதுமுக இயக்குனர் பாலசந்திரன் இயக்குகினார்.

    இப்படத்திற்கு லெனின் பாண்டியன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்சனின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் போலீசாக நடிக்கிறார்.

    தர்சன் கணேசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் இரண்டாவது மகனாவார். ராம் குமாரின் மூத்த மகனான துஷ்யந்த் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கிரார். பிரபுவின் மகனான விக்ரம் பிரபு ஏற்கனவே கதாநாயகனாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தர்சன் கணேசனும் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    நடிகர் கார்த்தி இந்த வீடியோவை வெளியிட்டு தர்சன் கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தனியார் மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்.

    தமிழ் சினிமாவில் வம்சம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    இவர் நடித்த டிமான்டி காலனி, டிமான்டி காலனி 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த ராம்போ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

    இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது தகவல் கொடுக்கப்படவில்லை.

    • பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
    • பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும்

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.

    மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    ஜனநாயகன் முதல் பாடல் நாளை (நவம்பர் 8) வெளியாகும் என படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் அந்த பாடல் நாளை மாலை 6.03-க்கு வெளியாகும் என பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த பாடல் விஜய் குரலில் இருக்கும் என கூறப்படுகிறது.  

    காதல், ஆக்ஷன், காமெடி, மருத்துவமனையில் நடக்கும் மாபியா, திரு நம்பியின் பிரச்சனை என திரைக்கதையை சுவாரசியமாக கொடுத்து இருக்கிறார்.

    சென்னையில் சாலை விபத்து ஒன்றில் வேன் முழுவதும் எரிந்து இருந்த நிலையில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உடல்கள் மீட்கப்படுகின்றனர். இறந்த 3 பேரும் கண் தெரியாத பெண்கள் என தெரிய வருகிறது. இதுகுறித்து விசாரிப்பதற்காக போலீஸ் உதவி கமிஷனரான ஆதித்ய மாதவன், இன்ஸ்பெக்டர் அஞ்சு குரியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முனிஷ் காந்த் ஆகியோர் விசாரணையில் ஈடுபடுகின்றனர்.

    இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது. இதனிடையே நாயகி கவுரி கிஷன் டாக்டராக பணிபுரிந்து வரும் மருத்துவமனையில் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையை கண்டுபிடிக்க கவுரி கிஷன் முயற்சி செய்கிறார்.

    இறுதியில் கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு வந்த பிரச்சினை என்ன? கவுரி கிஷன் அதை கண்டுபிடித்தாரா? வேன் விபத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பதை போலீஸ் அதிகாரியான ஆதித்ய மாதவன் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆதித்ய மாதவன் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். குறிப்பாக காட்சியில் ஸ்கோர் செய்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நாயகி கவுரி கிஷன் ஒரு டாக்டராக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். காதலனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது, மருத்துவமனையில் இருக்கும் பிரச்சனையை கண்டுபிடிக்க முயற்சி செய்வது என நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    மற்றொரு நாயகியாக நடித்து இருக்கும் அஞ்சு குரியன் போலீஸ் அதிகாரியாக மிடுக்கான நடை உடையுடன் அசத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சியில் மாஸ் காண்பித்து இருக்கிறார். மேலும் முனீஷ் காந்த், ஜெகன், ஆர். சுந்தர்ராஜன் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

    இயக்கம்

    மெடிக்கல் கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அபின் ஹரிஹரன். படம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். காதல், ஆக்ஷன், காமெடி, மருத்துவமனையில் நடக்கும் மாபியா, திரு நம்பியின் பிரச்சனை என திரைக்கதையை சுவாரசியமாக கொடுத்து இருக்கிறார். அதர்ஸ் என்கிற தலைப்பின் காரணத்தை படம் பார்ப்பவர்களுக்கு புரிய வைத்து இருப்பது சிறப்பு.

    இசை

    ஜிப்ரானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு

    அதேபோல் அரவிந்த்சிங்கின் ஒளிப்பதிவு கதையோடு அற்புதமாக பயணித்துள்ளது.

    சேரன் இயக்கி நடித்த ஆட்டோ கிராப் படம் தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது.

    இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கி 2004ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது.

    இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகிராப்' படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவியாளர்கள் தங்களின் அனுபவங்களை கலகலப்புடன் பகிர்ந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் சேரன், நடிகை சினேகா, சேரனின் உதவியாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெகதீசன், பாண்டிராஜ், உமாபதி, ஜெகன், பாடல் ஆசிரியர் சினேகன், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், முரளி, கலை இயக்குநர்கள் வைரபாலன், ஜே.கே, மணி ராஜ், நடிகர் கணேஷ் பாபு, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கேஜிஎப் சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருது பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் கமலின் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்கள்.
    • படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது. படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

    கமல் 237-ஆவது படத்தினை பிரபல சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ்(அன்புமணி, அறிவுமணி) சகோதர்கள் இயக்குகிறார்கள்.

    கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க மலையாள இயக்குநர் ஷ்யாம் புஷ்கரன் திரைக்கதையில் இப்படம் உருவாக உள்ளது.

    கேஜிஎப் சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருது பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் கமலின் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாவது அனைவரிடையே கவனம் பெற்றது.

    படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் கமல் 237 படத்தின் தொழில்நுட்ப குழுவை படக்குழு அறிமுகப்படுத்தி உள்ளது.

    அதன்படி, ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கு இசையமைப்பதாகவும், சுனில் கே.எஸ். ஒளிப்பதிவு செய்வதாகவும் ஷெமீர் கே.எம். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசையில் கடைசியாக வெளியான லோகா படம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    இவர்களுடன் இணைந்து கமல் எடுத்துக்கொண்ட புகைப்படங்ளும் வெளியாகி உள்ளது. 

    • மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார்.

    பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி மகேஷ் பாபுவை பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. படப்பிடிப்பு விறுவிறுபப்ான நடைபெற்று வருகிறது.

    இப்படத்தில் மலையாள மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் நடிக்கிறார் என்று ஏற்கனவே படக்குழு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இப்படத்தில் பிரித்விராஜ் மகேஷ் பாபுக்கு எதிராக வில்லன் வேடத்தில் கும்பா கேரக்டரில் நடிப்பார் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    ஸ்பைடர்மேன்-2 படத்தின் வில்லன் டாக்டர் ஆக்டோபஸ் வீல்சேரில் இருப்பதை இந்த போஸ்டர் நினைவூட்டுகிறது. அதேபோல் 24 படத்தில் சூர்யா வீல்சேரில் இருந்து கொண்டு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதையும் நினைவூட்டுகிறது.

    வருகிற 15-ந்தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெத்தி படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    ராம் சரண்- இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

    இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது என்ற அறிவிப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    இப்பாடலுக்கான ப்ரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சிகிரி பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது.

    ×