என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கடந்த செப்டம்பர் மாதம் தாங்கள் பெற்றோர்களாக போவதாக சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
    • திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல்-கத்ரீனா கைப். மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் இணைந்து நடித்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் தாங்கள் பெற்றோர்களாக போவதாக சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை தங்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இருவருக்கும் பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி, கரீனா கபூர், மாதுரி தீட்சித், பிபாஷா பாசு உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



    சென்னை ஐகோர்ட்டில் நாயகன் ரீ ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

    கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கினார். படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

    இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா அறிமுகமானார். மேலும், ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ்நாட்டில் 214 நாட்கள் ஓடியது.

    நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'நாயகன்' திரைப்படம் நேற்று வெளியாக இருந்தது.

    இதற்கிடையே, எஸ் ஆர் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் ஆர் ராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் நாயகன் ரீ ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதாவது, தாங்கள் நாயகன் படத்தின் வெளியீட்டு உரிமைய பெற்றிருந்தபோதும், வி.எஸ். பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் முறைகேடாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 'நாயகன்' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் ரீ-ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி என்.செந்தில்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, நீதிபதி செந்தில் குமார்," நாயகன் திரைப்படத்தை 16 முறை பார்த்திருக்கிறேன். காட்சி வாரியாக என்னால் சொல்ல முடியும்" என்று கருத்து தெரிவித்தார்.

    இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா படத்தை தொடர்ந்து, தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்றது.

    இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

    அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நதியே மியூசிக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

    தி கேர்ள் ஃபிரண்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

    இந்தநிலையில், தி கேர்ள் பிரண்ட் திரைப்படத்தின் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

    அதில்," தி கேர்ள் பிரண்ட் படத்தின் மூலம், படக்குழுவினர் சக்திவாய்ந்த ஒன்று.. முக்கியமான ஒன்று உருவாக்கியுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஜீரணிக்க கடினமாக இருக்கும் ஒன்று.

    அனைத்து நடிகர்களின் நடிப்பும் டாப் கிளாஸ் என்பது எனக்குத் தெரியும். குறிப்பாக, ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி, ராகுலஅ, அனு இமானுவேல் ஆகியோர் ஒரு தாக்கத்தை உருவாக்கப் போகிறார்கள்.

    நாளை நாம் அனைவரும் தி கேர்ள் பிரண்ட் படத்துடன் நடப்பதைப் பார்ப்போம். திரையரங்குகளில் சென்று அதை அனுபவியுங்கள்

    அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நிறைய அன்பும் பெரிய அணைப்புகளும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    தேவரகொண்டாவின் இந்த பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

    அந்த பதிவில்," இது சக்திவாய்ந்த ஒன்று. இது முக்கியமான ஒன்று. இதை ஜீரணிக்க கடினமாக இருக்கும் - நன்றாகச் சொன்னீர்கள். நன்றி..!

    தேவரகொண்டா நீங்கள் ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் மறைமுக ஆதரவாளராக இருந்து வருகிறீர்கள். இதற்காக நீங்கள் என்னைப் பற்றி பெருமைப்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

    • தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கவுரி கிஷனுக்கு பாராட்டுகள்.
    • அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா?

    அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள 'அதர்ஸ்' படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. சென்னையில் கடந்த வாரம் நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் 'பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே... வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று வேடிக்கையாக கேட்கப்பட்டது. இதையடுத்து யூ-டியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசிய கவுரி கிஷன், இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இதற்கிடையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய கவுரி கிஷனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது கவுரி கிஷன் 'இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு?', என்று ஆவேசப்பட்டார். இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

    அப்போது கவுரி கிஷன், ''இத்தனை ஆண்கள் உள்ள இடத்தில் ஒரு பெண்ணான என்னை 'டார்கெட்' செய்து கேள்வி கேட்கிறீர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனி உடலமைப்பு இருக்கும். அதற்காக என் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் கேட்கலாமா... இது உருவக்கேலி செய்வது போலத்தான். என் எடையை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?'', என்று ஆதங்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் படக்குழுவினர் கேட்டுக்கொண்டதால் அவர் அமைதியானார். இது படவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகையும், பா.ஜ.க. மாநில துணை தலைவியுமான குஷ்பு, கவுரி கிஷனுக்கு ஆதரவாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    * பத்திரிகைத்துறை தனது தளத்தை இழந்துவிட்டது.

    * பத்திரிகையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பத்திரிகைத்துறையை சாக்கடைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

    * ஒரு பெண்ணின் எடை எவ்வளவு என்பது அவர்களின் வேலை இல்லை. அதைப் பற்றி ஹீரோவிடம் கேட்பது?? என்ன ஒரு அவமானம்!

    * தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கவுரி கிஷனுக்கு பாராட்டுகள்.

    * அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா?

    * மரியாதை ஒருபோதும் ஒரு வழி போக்குவரத்து அல்ல. மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 



    • தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார்.
    • ராஷ்மிகா, ‘இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர்.

    ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லி வருகிறது. அந்த மோதிரமும் தற்போது வைரலாகி வருகிறது.

    இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

    இந்த நிலையில், விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இவர்களின் திருமணம் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ஹரிஷ் ராய் நேற்று காலமானார்.
    • அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    'கே.ஜி.எப்.' மற்றும் உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஓம்' படங்களில் நடித்து பிரபலமானவர் ஹரிஷ் ராய். இவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பெங்களூருவில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் ஹரிஷ் ராய்க்கு நுரையீரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ஹரிஷ் ராய் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, நடிகர் யாஷ் மறைந்த ஹரிஷ் ராய் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

    கன்னட சினிமாவில் மூத்த நடிகராக இருந்த ஹரிஷ் ராய் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

    சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதைதொடர்ந்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் நடிகர் அருண் விஜய் வீட்டில் சோதனை செய்தனர்.

    • அஜித்குமாரின் கருத்து வைரலாகி பெரும் கவனம் பெற்றது.
    • ஒரு தரப்பு விஜய்க்கு ஆதரவாக உள்ளது என்றும் இன்னொரு தரப்பு விஜய்க்கு எதிராக உள்ளது என்றனர்.

    சென்னை:

    நடிகர் அஜித்குமார் சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,''கரூர் சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் அதிக கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி எதுவும் நடப்பதில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

    அஜித்குமாரின் இந்தக் கருத்து வைரலாகி பெரும் கவனம் பெற்றது. ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாக பேசினார் என்றும், இன்னொரு தரப்பினர் விஜய்க்கு எதிராக இந்தக் கருத்து உள்ளது என விமர்சனங்களும், விவாதங்களும் எழுந்தன.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமாரே இன்று விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அஜித்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது.

    இதற்கு முன்பு ஆந்திரா சினிமா தியேட்டரில் நடந்துள்ளது. பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது. பல நாடுகளில் நடந்துள்ளது.

    பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் நான் உள்பட அனைவருக்கும் பொருந்தும்.

    எனது இந்த கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படாது என்று நம்புகிறேன். ஒரு சிலர் ரசிகர்கள் மீது பழியை சுமத்துகிறார்கள்.

    எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது.

    என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன்.

    எல்லாருமே அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • சேரனின் இயக்கி நடித்த 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது .

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

    அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ரீ ரிலீஸை முன்னிட்டு சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

    • பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர்.
    • இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

    பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

    தொடர்ந்து, பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கும்கி 2 படத்தின் டீசர் அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கும்கி 2 படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

    கும்கி 2 படம் வரும் 14ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஆந்திர அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த ரோஜா கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
    • கடைசியாக 2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின.

    90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையயாக விளங்கிய ரோஜா தற்போது மீண்டும் காம்பேக் கொடுத்துள்ளார். ஆந்திர அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த ரோஜா கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.  

    ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்ற ரோஜா தனது திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழ் திரைப்படம் மூலம் அவரின் கம்பேக் நிகழ்கிறது.

    கடைசியாக 2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின.

    இந்நிலையில் டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லெனின் பாண்டியன்' படத்தில் ரோஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரோஜாவின் கதாபாத்திர வீடியோவை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார். 

    கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

    ×