என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும்
- Lets begin என்ற தலைப்பில் போஸ்டர் ஒன்றை 'ஜன நாயகன்' படக்குழு வெளியிட்டது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இன்று மதியம் Lets begin என்ற தலைப்பில் போஸ்டர் ஒன்றை 'ஜன நாயகன்' படக்குழு வெளியிட்டது. இதனால் ஜனநாயகம் அப்டேட் கேட்டு கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் குஷியில் இருந்தனர்.
இந்நிலையில் ஜனநாயகன் முதல் பாடல் வரும் நவம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த பாடல் விஜய் குரலில் இருக்கும் என கூறப்படுகிறது.
- படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
- சான் ரோல்டன், தீ குரலில் ஏகாதசி வரிகளில் உருவாகி உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் உருவாகி வருகிறது.
பராசக்தி என பெயரிடப்பட்ட இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ளது.
படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார்.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி அடுத்தாண்டு ஜனவரி 14 இல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.
பராசக்தி முதல் பாடலின் ப்ரொமோ அண்மையில் வெளியாகியிருந்த நிலையில் முதல் பாடலான 'அடி அலையே' முழுமையாக இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
சான் ரோல்டன், தீ குரலில் ஏகாதசி வரிகளில் ஜிவி பிரகாஷ் இசையில் சிவகார்த்திகயேன் - ஸ்ரீலீலா இடையேயான காதல் பாடலாக இது உருவாகி உள்ளது.
- ஆர்யன் படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
- கடந்த வாரம் வெளியான ஆர்யன் படம் மக்களிடையே கலவையான விமர்சங்களையே பெற்றது.
'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.
இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சங்களையே பெற்றது. இதனால் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படக்குழு மாற்றியமைத்துள்ளனர். இனிமேல் திரையரங்குகளில் இந்த கிளைமேக்ஸ் காட்சியை பார்க்கலாம் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிருஷ்ணனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிருஷ்ணன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என பதில் அளித்தார்.
இருப்பினும், நடிகை கௌரி கிருஷ்ணனை பேசவிடாமல் மாறி மாறி சத்தம் எழுப்பியதால் நடிகை கௌரி கிருஷ்ணன் கண்கலங்கினார். செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் கூட இல்லாத நிலையில் இந்த தரமற்ற செயலுக்கு யாரும் கேள்வி எழுப்பமாட்டுகிறீர்கள் என செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.
பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் யூடியூபர்கள் செய்யும் செயலால் நடிகை கௌரி கிஷன் செய்தியாளர் சந்திப்பு முடிந்து மௌனமாக புறப்பட்டு சென்றார்.
- ஜனநாயகன் படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது
- இப்படத்திற்கு பின்பு முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ஜனநாயகம் அப்டேட் கேட்டு கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் அடைந்துள்ளனர்.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.
அவரது ஸ்டோரியில், எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார். 'ஜாய் கிரிசில்டா என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா?" என ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கிடையே, ஆரம்பம் முதல் அமைதி காத்து வந்த மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்," எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களை பிரிப்பது தான் தனது நோக்கம்" என்று வெளிப்படையாக கூறியிருப்பது பதிவாகி உள்ளதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ருதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மார்ச் 2025-ல் எனது குடும்பப் படத்தை நான் பதிவேற்றியபோது, ஏப்ரல் 2025-ம் ஆண்டிலேயே ஜாய் கிரிசில்டாவிடமிருந்து இந்த அநாகரீகமான செய்திகள் எனக்கு வந்தன.
நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு இதுபோன்ற செய்திகள் ஏன் அனுப்பப்பட்டன? இந்த ஒற்றை உண்மை அவளுடைய இரட்டை வேடத்தையும், தனிப்பட்ட மற்றும் பண ஆதாயங்களுக்காக அவள் ஊடகங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறாள் என்பதையும் அம்பலப்படுத்துகிறது.
இந்த செயல்கள் அனைத்தும் பணத்திற்காக மட்டுமே உந்துதல் பெற்றவை மற்றும் எங்கள் குடும்பத்தின் அமைதியை கெடுக்கும் நோக்கில் உள்ளன.
என் கணவர் ரங்கராஜிடமிருந்து என்னைப் பிரித்து அவரிடமிருந்து பணம் பறிக்கும் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தும் கடிதத்தை ஜாய் தானே எழுதியுள்ளார்.
ஜாய்யின் சொந்த கையால் எழுதப்பட்ட கடிதம் அவளுடைய உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது என்பது இப்போது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பணம் அல்லது வீட்டையோ அல்லது என் கணவர் ரங்கராஜிடமிருந்து என்னைப் பிரிக்கவோ ஒருபோதும் விரும்பவில்லை என்று கூறி அவள் நேர்காணல்களை அளித்து வந்தாலும், அவளுடைய சொந்த வார்த்தைகள் வேறுவிதமாக நிரூபிக்கின்றன.
பத்தி 4: "ரங்கராஜ் எனது நிதித் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."
பத்தி 6: "ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."
பத்தி 8: "ரங்கராஜ் எனக்கு ஒரு பிளாட் வாங்க வேண்டும்" மற்றும் "ரங்கராஜ் எனக்கு மாதம் ரூ.8,00,000 தர வேண்டும்."
பத்தி 9: "எனக்கு இப்போது ரூ.10,00,000 வழங்க வேண்டும்."
பத்தி 12: "ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவை விவாகரத்து செய்ய வேண்டும்."
ஜாயின் கையெழுத்தில் உள்ள இந்த வரிகள், என் கணவரிடமிருந்து பணம் பறித்து, அவரது சட்டப்பூர்வ மனைவியான என்னை அவரிடமிருந்து பிரிப்பதே ஜாயின் நோக்கமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.
நான் என் கணவருடன் உறுதியாக நின்று கடைசி வரை அவரைப் பாதுகாப்பேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- காசிம் பாய் கதாபாத்திரத்தில் ஹரீஸ் ராய் தோன்றினார்.
- 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 இல் வெளியான படம் கேஜிஎஃப். இந்திய அளவில் மிகப்பெறிய வெற்றியை இப்படத்தின் 2ஆம் பாகம் 2022 இல் வெளியானது. இந்த 2 படத்திலும் காசிம் பாய் கதாபாத்திரத்தில் தோன்றி கவனம் பெற்றவர் ஹரீஸ் ராய்.
கேஜிஎஃப் மூலம் பரிட்சயமானவராக இருந்தாலும் கன்னட சினிமாவில் பல படங்களில் தோன்றியிருக்கிறார்.
குறிப்பாக 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயுடன் ஹரீஸ் ராய் போராடி வந்தார்.
இந்நிலையில் தைராய்டு புற்றுநோய் வயிறு வரை பரவியதால் அவர் பெங்களூருவில் உள்ள கித்வாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவம்பர் 6) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 55.
முன்னதாக ஒரு நேர்காணலில் தனது நோய் குறித்து பேசியிருந்த ஹரிஷ் ராய், கேஜிஎஃப் படத்தில் தாடியுடன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கினார்.
"புற்றுநோய் என் தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வீக்கத்தை மறைக்க நான் தாடியை வளர்த்தேன். "யாரும் விதியிலிருந்து தப்பிக்க முடியாது" என்று அவர் தெரிவித்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சிகிச்சை செலவுகள் குறித்து அவர் கூறுகையில், 'ஒரு ஊசியின் விலை 3.55 லட்சம் ரூபாய், மருத்துவர்கள் 63 நாட்களில் 3 ஊசிகள் போட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர், அதன் விலை சுமார் 10.5 லட்சம் ரூபாய்' என்று கூறி நிதி உதவி கோரியிருந்தார்.
இந்நிலையில் அவரின் மறைவு கன்னட திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ரங்கராஜ் மீது ஜாமினில் வெளியே வரக்கூடிய பிரிவுகளின் கீழ் தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
- கடந்த ஒன்றரை மாதமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான திருமண மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ஜாய் கிரிசில்டா அளித்த மனுவில்,
மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக மோசடி, மிரட்டல், கொடுமைப்படுத்துதல் மற்றும் கருச்சிதைவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்தேன். ஆனால் தற்போது ரங்கராஜ் மீது ஜாமினில் வெளியே வரக்கூடிய பிரிவுகளின் கீழ் தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. காவல்துறை விசாரணை திருப்திகரமாக இல்லை. கடந்த ஒன்றரை மாதமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்தாததால் தான் மகளிர் உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தேன். இதனால் ரங்கராஜ் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோருகிறேன் என தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இம்மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனு மீது பதில் அளிக்க காவல்துறைக்கு வரும் 12-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
- என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது.
- மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா?” என ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பியிருந்தார்.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.
அவரது ஸ்டோரியில், எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார். 'ஜாய் கிரிசில்டா என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா?" என ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் முன்பு பேசிய வீடியோ ஒன்றை ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ளார் .
வீடியோவை வெளியிட்டு ஜாஸ் கிரிசில்டா கூறியிருப்பதாவது:- இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband @MadhampattyRR ? மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி...
நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது என் கணவர் என்று சொல்லப்படுபவர் இந்த வீடியோ எனக்கு அனுப்பினார். நாங்கள் பிரிந்திருக்கும்போதோ அல்லது நேரில் சந்திக்க முடியாதபோதோ அவர் தினசரி இதுமாதிரியான வீடியோக்களை எனக்கு அனுப்புவார் என்று கூறியுள்ளார்.
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் காந்தா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரீ ரிலீஸை முன்னிட்டு சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் புதிய டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. டிரெய்லரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட உள்ளனர்.
- வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.
- திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமான 'பீட்சா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பாபி சிம்ஹா. இதையடுத்து 'காதலில் சொதப்புவது எப்படி', 'சூது கவ்வும்', 'பகலவன்', 'ஜிகர்தண்டா', 'மகான்' போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பாபி சிம்ஹா பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் பாபி சிம்ஹா இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தனது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம் செய்தார். இதன்பின், அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.






