என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actress pooja hegde"

    • 35 வயதாகும் பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • முன்னணி நடிகர்களின் படங்களிலும் குத்தாட்டம் போட தயார் என்றும் அறிவித்துள்ளார்.

    இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி', 'பீஸ்ட்', 'ரெட்ரோ' படங்களில் நடித்துள்ளார். 'கூலி' படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு கலக்கியிருந்தார்.

    35 வயதாகும் பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்களிலும் குத்தாட்டம் போட தயார் என்றும் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளது. "வாழ்க்கையில் நட்பு என்பது ஒவ்வொருவருக்கும் வரும் அற்புதமான உறவு. அந்த உறவை கொண்டாடுங்கள். பாதுகாத்து கொள்ளுங்கள். நட்பில் சந்தேகம் என்றும் கூடாது.

    உண்மையான நம்பிக்கைதான் நட்பை தாங்கி பிடிக்கும். அப்படிப்பட்ட உண்மையான நட்பு கிடைத்த அத்தனை பேரும் அதிர்ஷ்டசாலிகளே'', என்றார்.

    • பூஜா ஹெக்டே நடிப்பில் திரைக்கு வந்த சில படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தோல்வி அடைந்தன.
    • நல்ல நேரத்தை எதிர்பார்த்து பொறுமையாக காத்திருந்தேன்.

    தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருந்தார். இந்தி, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

    பூஜா ஹெக்டே நடிப்பில் திரைக்கு வந்த சில படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தோல்வி அடைந்தன. இதை வைத்து அவருடைய சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது என்று சிலர் பேசத் தொடங்கினர்.

    அதற்கேற்ப ஒரு ஆண்டுக்கும் மேலாக பூஜா ஹெக்டேவிடம் இருந்து எந்த புது பட அறிவிப்பும் வெளியாகவில்லை. சினிமாவை விட்டு விலகி விட்டார் என்றும் கிசுகிசுத்தனர்.

    ஆனால் இப்போது மீண்டும் அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகளை பெற்று பிசியாக நடிக்க தொடங்கி உள்ளார்.

    இதுகுறித்து பூஜா ஹெக்டே கூறும்போது, "நான் தோல்விகளை பார்த்து எப்போதும் கவலைப்பட்டது இல்லை. பயப்படவும் இல்லை. என்னை பொறுத்தவரை எனக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் நூறுசதவீதம் திறமையை வெளிப்படுத்தினேன்.

    நல்ல நேரத்தை எதிர்பார்த்து பொறுமையாக காத்திருந்தேன். இப்போது ஐந்து படங்கள் கைவசம் வைத்து நடிக்கிறேன். தமிழில் விஜய்யின் 69-வது படம், சூர்யா படம் போன்றவற்றிலும் இந்தியில் ஷாகித் கபூர் ஜோடியாக தேவா படத்திலும் நடிக்கிறேன். மேலும் இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×