என் மலர்
நீங்கள் தேடியது "slug 233021"
- பூஜா ஹெக்டே, சல்மான்கானுடன் 'கிசி கா பாய் கிசி கா ஜான்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
- இந்த படத்தில் நடிக்கும் போதே சல்மான் கானுடன் பூஜா டேட்டிங் செய்வதாக பலவாறு வதந்திகள் பரவி வந்தன.
நடிகை பூஜா ஹெக்டே, சல்மான்கானுடன் 'கிசி கா பாய் கிசி கா ஜான்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் போதே சல்மான் கானுடன் பூஜா டேட்டிங் செய்வதாக பலவாறு வதந்திகள் பரவி வந்தன. இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்த பூஜா நேற்று இது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, நான் ரன்வீர் சிங்குடன் நடித்த சர்க்கஸ் திரைப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தேன். ஆனால் அது தோல்வியில் முடிந்ததை நினைத்து நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன்.
சல்மான் கான் -பூஜா ஹெக்டே
தற்போது சல்மான் கானுடன் நடித்த படம் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கூடவே எங்கள் இருவரை பற்றியும் கிசுகிசுக்களும் சேர்ந்து பரவி வருகிறது. ஆனால் நான் இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். தனியாக இருக்கத்தான் விரும்புகிறேன். சல்மான் கானுடன் என்னை டேட்டிங் செய்வதாக வந்த செய்திகளை நானும் படித்தேன். ஆனால் அது உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.
- இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்.
- இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து உலக அளவில் ஹிட் அடித்தது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.
அரபிக்குத்து - பீஸ்ட்
அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களைக்கு மேல் கடந்துள்ளது. இதையடுத்து இப்பாடல் வெளியாகி ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்து படக்குழு வீடியோ ஒன்றி வெளியிட்டது.
அரபிக்குத்து - பீஸ்ட்
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே அரப்பிக்குத்து பாடலின் புதிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.
- தமிழில் முகமுடி படத்தின் மூலம் அறிமுகமானவர் ‘பூஜா ஹெக்டே’.
- இவர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார்.
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பூஜா ஹெக்டே
இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெறவே தன் சம்பளத்தை ரூ.3 கோடியிலிருந்து ரூ.3.5 கோடியாக உயர்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் சமீபத்தில் நடித்த 'ராதே ஷ்யாம்' போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
- இவர் தற்போது டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பூஜா ஹெக்டே - சல்மான் கான்
இதைத்தொடர்ந்து இவர் சல்மான் கான் தயாரிக்கவுள்ள இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவும் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்துள்ளதாகவும் இப்போது இவருவம் ஒன்றாக நேரத்தை செலவிடுவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.
எனினும் பூஜா ஹெக்டே மற்றும் சல்மான் கான் தரப்பில் இது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் தன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
- இவர் தற்போது சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பூஜா ஹெக்டே
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் பூஜா ஹக்டே தனக்கு அடிப்பட்டு விட்டதாக சமுக வலைதளத்தில் காலில் கட்டுடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பூஜா ஹெக்டே
இந்நிலையில், இவர் தொடர்ந்து சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "இரண்டு வாரங்களுக்கு முன்பு.. நான் என் வாழ்வில் இரண்டாவது முறையாக நடக்க கற்றுக் கொண்டேன்.. இது மிகவும் வேடிக்கையானது" என்று பதிவிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே பதிவு
இதற்கு முன்பும் தான் சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை பூஜா ஹெக்டே இணையத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே.
- இவருக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டது.
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பூஜா ஹக்டே
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் பூஜா ஹக்டே தனக்கு அடிப்பட்டு விட்டதாக சமுக வலைதளத்தில் காலில் கட்டுடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காலில் காயத்துடன் பூஜா ஹெக்டே
இந்நிலையில், இவர் தற்போது குணமடைந்து வருகிறார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
- முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
- பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வந்தார். அந்த சமயம் 'சீதா ராமம்' படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததால், அவரால் நடிக்க முடியாமல் போனது.
இப்படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக மிரினல் தாக்கூர் நடித்திருந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த 'சீதா ராமம்' வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் மிரினல் தாக்கூருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், ''அந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து இருந்தால் இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன். இனி அப்படி ஒரு வாய்ப்பு வருவது கடினம் தான்'' என்று தனது நண்பர்களிடம் பூஜா ஹெக்டே புலம்பி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
- பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பூஜா ஹெக்டே
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். இதையடுத்து இவர் 3 கண்டங்கள், 4 நகரங்கள் என ஒரு மாதம் நீண்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
பூஜா ஹெக்டே
தற்போது பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடற்கரை அருகே மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற ஆடையில் இவர் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
- இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
- இந்த படம் இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் ஜூன் 1-ஆம் தேதி வெளியான மாதவனின் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
சூர்யா
இதைத்தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'சூர்யா 41'. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.
இதனிடையே நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பூஜா ஹெக்டே
அதன்படி, இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஒரு சில காரணங்களுக்காக யூ.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திந்தார்.
- பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்காக அதிக செலவு செய்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த போது பட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி அதிக செலவு வைத்து சர்ச்சையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பூஜா ஹெக்டே பெற்றோருடன் மும்பையில் வசிக்கிறார். படப்பிடிப்புக்காக சென்னை அல்லது ஐதராபாத்துக்கு வரும்போது தன்னுடன் சிகை அலங்கார நிபுணர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட 10 முதல் 12 உதவியாளர்களை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்காக அநாவசியமான செலவுகளை செய்ய கூடாது என்று அவரிடம் அறிவுறுத்தப்பட்டு இருந்ததாம். சமீபத்தில் படத்தின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது அதிக உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பட நிறுவனத்தின் பணத்தில் பூஜா ஹெக்டே செலவு செய்தது தெரியவந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து உதவியாளர்களுக்கான ஓட்டல், சாப்பாடு உள்ளிட்ட செலவு பில்களை பூஜா ஹெக்டேவுக்கு அனுப்பி அந்த பணத்தை திருப்பி தரவேண்டும் என்று கண்டிப்பான அறிவுறுத்தல் விடுத்து இருப்பதாகவும், இதனால் அதிர்ச்சியான பூஜா ஹெக்டே பணத்தை கட்டி விட தயாராகி வருவதாகவும் திரைப்பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
- சமீபத்தில் நடந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டே கலந்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது இவர் கைவசம் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஜன கன மன படம் உள்ளது.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் சட்டையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற சட்டையில் இவர் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
— Pooja Hegde (@hegdepooja) June 19, 2022
- நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
- சமீபத்தில் நடந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டே கலந்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது இவர் கைவசம் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஜன கன மன படம் உள்ளது.
இந்நிலையில், கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடிக்கும் அடுத்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதன்முறையாக யஷ் படத்தில் இவர் இணையவுள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.